சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
'டிமாண்டி காலனி' படத்தை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளரான இவரது இயக்கத்தில் அதர்வா, நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் 'இமைக்கா நொடிகள்'. இதில் அதர்வாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க, புலனாய் அதிகாரியாக நடிக்கிறார் நயன்தாரா.
பாலிவுட் பிரபலம் அனுராக் காஷ்யாப் வில்லனாக நடிக்கிறார். ஒரு கெஸ்ட் ரோலில் விஜய் சேதுபதியும் நடிக்கிறார். கேமியோ பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென நயன்தாரா கால்ஷீட் சொதப்பியதால் பட வேலைகள் தடைபட்டன. பிறகு ஒருவழியாக படத்தில் நடித்துக் கொடுத்தார் நயன்தாரா.
படப்பிடிப்பு முடிவடைந்ததும் எடிட்டிங்கை தொடங்கி அதையும் முடித்துவிட்ட நிலையில் டப்பிங் வேலைகள் துவங்கி விட்டன. நயன்தாரா நடித்த பெரும்பாலான படங்களிலும் நயன்தாராவுக்காக சின்னத்திரை நடிகை தீபா வெங்கட் தான் டப்பிங் பேசி வருகிறார்.
இமைக்கா நொடிகள் படத்திற்கும் தீபா வெங்கட் தான் டப்பிங் பேசுகிறார். இப்படத்திற்காக தீபா வெங்கட் டப்பிங் பேசுவது மாதிரியான ஒரு புகைப்படத்தை நேற்று வெளியிட்டிருந்தனர். இந்த படத்தை டிசம்பர் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.