ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இன்றைக்கு சினிமாவுக்கு வருகிறவர்கள் முதல் படத்திலேயே அந்த ஸ்டார், இந்த ஸ்டார் என்ற பட்டத்தோடுதான் வருகிறார்கள். ஒரு படம் ஹிட்டானால் கேட்கவே வேண்டாம். அடுத்த சூப்பர் ஸ்டார் நான் தான் என்பார்கள். இன்றைக்கு சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுகிற ரஜினிகாந்த் தனது 24 படங்களில் சூப்பர் ஸ்டார் பட்டத்தை போட்டுக் கொள்ளவில்லை.
பைரவி படம் வெளிவந்தபோது அதன் விநியோக உரிமையை பெற்றிருந்த கலைப்புலி எஸ்.தாணு, அவருக்கு பெரிய கட்அவுட் வைத்ததோடு பேப்பர் விளம்பரங்களில் சூப்பர் ஸ்டார் பட்டத்தையும் கொடுத்திருந்தார். ஆனால் ரஜினி "எம்.ஜி.ஆர், சிவாஜி மாதிரி ஜீனியஸ்கள் இருக்கும்போது எனக்கு இந்த பட்டமெல்லாம் எனக்கு வேண்டாம் எடுத்து விடுங்கள்" என்று கூறினார். அதற்கு தாணு "நான் படத்தை வாங்கியிருக்கிறேன். அதில் லாபம் சம்பாதிக்க எதுவும் செய்வேன் என்னை தடுக்காதீர்கள்" என்று கூறிவிட்டார்.
பைரவி படத்திற்கு பிறகு சில படங்களின் பேப்பர் விளம்பரங்களில்தான் சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டார்களே தவிர படங்களின் டைட்டிலில் இடம்பெறவில்லை. பைரவிக்கு பிறகு இளமை உஞ்சலாடுகிறது, முள்ளும் மலரும், தாய் மீது சத்தியம், அவள் அப்படித்தான், ப்ரியா, நினைத்தாலே இனிக்கும், தர்மயுத்தம், அன்னை ஓர் ஆலயம், பில்லா உள்பட 24 படங்கள் வெளிவந்தது. எதிலும் அவர் சூப்பர் ஸ்டார் இல்லை.
1980ம் ஆண்டு வெளிவந்த நான் போட்ட சவால் என்ற படத்தில் அதன் இயக்குனர் புரட்சிதாசன் ரஜினியை கேட்காமலேயே அந்தப் படத்தின் டைட்டிலில் சூப்பர் ஸ்டார் என்று போட்டார். இதற்கு ரஜினி அவரை கோபித்துக் கொண்டாலும் அதன் பின் வந்த படங்களில் போடுவதை அவரால்கூட தடுக்க முடியவில்லை. அன்றிலிருந்து இன்று வரை ஒரே சூப்பர்ஸ்டார் அவர்தான்.