ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
இசை அமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம், பள்ளி பருவத்திலே என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக காதல் கசக்குதய்யா படத்தில் நடித்த வெண்பா நடிக்கிறார். இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் நந்தன்ராமின் தந்தையாகவும், ஊர்வசி தாயாகவும் நடிக்கிறார்கள். மறுபடியும் காதல் படத்தை இயக்கிய வாசுதேவ் பாஸ்கர் இயக்குகிறார். விஜய் நாராயணன் என்ற புதுமுகம் இசை அமைத்துள்ளார். வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான் இசை அமைப்பாளர் சிற்பியிடம் சில காலம் கீ-போர்ட் பிளேயராக பணியாற்றியுள்ளார். அந்த அடிப்படையில் சிற்பி, தன் மகனுடன் ஏ.ஆர்.ரகுமானை சந்தித்தார். பாடல் வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழை கொடுத்தார். ஏ.ஆர்.ரகுமான் பாடல்களை கேட்டதோடு படத்தின் டீசர் மற்றும் டிரைலரையும் பார்த்து நந்தன் ராமை பாராட்டி, வாழ்த்தினார்.
"நேர்மையுடன் கடுமையாக உழைத்தால் சினிமாவில் ஜெயிக்கலாம்" என்று அவரை வாழ்த்தினார். "நீங்கள் மீண்டும் இசை அமைக்கலாமே ஏன் ஒதுங்கி இருக்கிறீர்கள்?" என்று சிற்பியிடமும் கூறியிருக்கிறார் ரகுமான்.