Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அக்டோபர் 6-ல் வெளிவருகிறது விழித்திரு

16 செப், 2017 - 10:18 IST
எழுத்தின் அளவு:
Vizhithuru-movie-releasing-on-Oct-6

எழுத்தாளர் மீரா கதிரவன், அவள் பெயர் தமிழரசி என்ற படத்தை இயக்கினார். அந்தப் படம் சரியாக போகவில்லை. அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு விழித்திரு என்ற படத்தை இயக்கி, நண்பர்களுடன் இணைந்து அவரே தயாரிக்கவும் செய்தார். இதில் கிருஷ்ணா, விதார்த், வெங்கட்பிரவு, தன்ஷிகா, எரிக்கா பெர்ணாண்டஸ், அபிநயா உள்பட பலர் நடித்துள்ளனர். விஜய் மில்டன், ஆர்.வி.சரண் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சத்யன் மகாலிங்கம் இசை அமைத்துள்ளார்.

இந்தப் படம் ஒரு வருடத்திற்கு முன்பே நிறைவடைந்து விட்டது. ஆனால் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட சில பிரச்னைகள் காரணமாக வெளிவராமல் தள்ளிப்போய்கொண்டே இருந்தது. தற்போது வருகிற அக்டோபர் மாதம் 6ந் தேதி வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மீரா கதிரவன் கூறியிருப்பதாவது:

இந்த தாமதம் மிகுந்த மனவலியை தந்தது. ஆனால் இந்த தொழிலில் இவ்வாறான எதிர்பாராத காரியங்கள் நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. எங்கள் படத்தை ரிலீஸ் செய்யவுள்ள சவுந்தர்யன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களின் கதை இன்றும் புதுமையாக இருக்கும் என்பதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. தரமான கதையை சுவாரஸ்யமாக தந்திருப்பதால் இப்படத்தை சினிமா ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என நம்புகிறேன் என்றார் இயக்குனர் மீரா கதிரவன்.

Advertisement
மல்டி ஸ்டார்களுடன் மணிரத்னத்தின் அடுத்த படம்: ஜனவரியில் படப்பிடிப்புமல்டி ஸ்டார்களுடன் மணிரத்னத்தின் ... இசை அமைப்பாளர் சிற்பி மகனுக்கு ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து இசை அமைப்பாளர் சிற்பி மகனுக்கு ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mannar Vagaiyara
    • மன்னர் வகையறா
    • நடிகர் : விமல்
    • நடிகை : ஆனந்தி
    • இயக்குனர் :பூபதி பாண்டியன்
    Tamil New Film Iravukku Aayiram Kangal
    Tamil New Film Seyaal Movie
    • செயல்
    • இயக்குனர் :ரவி அப்புலு
    Tamil New Film Kombu
    • கொம்பு
    • நடிகர் : லொள்ளுசபா ஜீவா
    • நடிகை : திஷா பாண்டே
    • இயக்குனர் :இ. இப்ராகிம்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in