Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

யாருடனும் கூட்டு இல்லை; தனிக்கட்சி தொடங்குகிறார் கமல்

14 செப், 2017 - 16:38 IST
எழுத்தின் அளவு:
Kamal-to-start-individual-party-soon

அரசியலில் களமிறங்க இருக்கும் நடிகர் கமல்ஹாசன், யாருடனும் கூட்டு சேராமல் தனிக்கட்சி தொடங்க இருப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் நடிகர் கமல்ஹாசன், தமிழக அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அதோடு சமீபத்திய அவருடைய பேட்டிகள், டுவீட்டரில் பதிவிடும் கருத்துகள் எல்லாம் அரசியல் தொடர்பானதாகவே இருக்கின்றன. இதனால் அவர் விரைவில் அரசியல் களத்தில் இறங்கலாம் என தெரிகிறது. அதற்கான வேலைகளும் நடந்து வருகின்றன.

அக்டோபரில், கமல் அரசியல் களத்தில் இறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனது அரசியல் குறித்து பேசியிருக்கிறார். அதில்,' நான் அரசியலில் களமிறங்கினால் நிச்சயம் தனிக்கட்சி தான் தொடங்குவேன், யாருடனும் கூட்டு சேர மாட்டேன்' என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து நடிகர் கமல் மேலும் கூறியிருப்பதாவது...

தனிக்கட்சி
எனக்கும் அரசியல் பற்றிய சிந்தனை உள்ளது. ஆனால் எந்த கட்சி கொள்கையுடனும் எனது சந்தனைகள் ஒத்துப்போகாது. சமீபத்தில் நான் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தேன். உடனே நான் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைய போவதாக செய்திகள் வந்தன. எனக்கு எந்த கட்சியுடனும் சேரும் எண்ணம் இல்லை. அரசியலுக்கு வரும் சூழ்நிலையில் தனிக்கட்சி தான் தொடங்குவேன். ஆனால் இது நானாக எடுக்கும் முடிவாக இருக்காது, கட்டாயத்தின் பேரில் தான் இருக்கும்.

சசிகலா நீக்கம் மாற்றத்திற்கான நடவடிக்கை
தமிழகத்தில் அரசியல் மாற்றம் வர வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் இருக்கிறது. அதற்கான நடவடிக்கை தான் சசிகலாவை அதிமுக., பதவியிலிருந்து நீக்கியதாக நான் கருதுகிறேன்.

அரசியலமைப்பில் மாற்றம் வேண்டும்
இந்தியாவில் அரசியல் அமைப்பு தோல்வி அடைந்து விட்டது. இதில் மாற்றம் வரவேண்டும். ஒருவேளை நான் அரசியலில் வெற்றி பெற்று சொன்னதை செய்யவில்லை என்றால், உடனே என்னை அந்த பொறுப்பிலிருந்து அகற்ற வேண்டும். ஐந்து ஆண்டுகள் வரை காத்திருக்க கூடாது. இப்படியொரு நிலை உருவாக வேண்டும். இப்படியொரு மாற்றம் என் தமிழ்நாட்டில் இருந்து தொடங்க வேண்டும். ஏனென்றால் என் வீட்டை முதலில் சுத்தம் செய்துவிட்டு பிறகு என் அண்டை வீட்டை சுத்தப்படுத்த வேண்டும் என நினைக்கிறேன்.

நல்லாட்சி தேவை
என்னை சிலர் சந்தர்ப்பவாதி என்று சொல்லலாம். ஆமாம் நான் சந்தர்ப்பவாதிதான். நான் தீவிர அரசியலுக்கு வர சரியான நேரம் இது. எங்களுக்கு நல்ல ஆட்சி தேவை. மாற்றத்தை நான் ஆரம்பிப்பேன். இந்த மாற்றம் என் வாழ்நாளில் நிறைவேறாமல் போகலாம். அடுத்தடுத்து வருபவர்கள் இதை முன்னெடுத்துச் செல்வார்கள் என நம்புகிறேன்.

ஊழல் இருக்காது
சரியான நேரத்தில் மாற்றம் ஆரம்பிக்கும், அதற்கான பணிகள் ஆரம்பமாகிவிட்டன. என்னை நீக்கிவிடலாம் என்று சிலர் கருதுகின்றனர். அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, 'ஒன்று நான் போவேன்; இல்லை அரசியலில் ஊழல் வெளியே போகும். இரண்டும் சேர்ந்து இருக்காது'.

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Advertisement
ஷங்கர் படத்தின் பிரமாண்டம் புலிகேசி-2விலும் இடம்பெறுகிறதுஷங்கர் படத்தின் பிரமாண்டம் ... இணையதளத்தில் வெளியானது துப்பறிவாளன் : படக்குழு ஷாக் இணையதளத்தில் வெளியானது ...


வாசகர் கருத்து (9)

Sukumar Talpady - Mangalore ,இந்தியா
17 செப், 2017 - 11:47 Report Abuse
Sukumar Talpady தனிக்கட்சி தொடங்குவதில் ஒன்றும் பெரிய சாதனை இல்லை திரு.கமல் ஹாசன் அவர்களே யாருடனும் கூட்டு இல்லை என்று சொன்னீர்களே அதை கடைசி வரைக்கும் காப்பாற்ற வேண்டும். நினைத்தபடி வாக்குகள் கிடைக்க வில்லை என்றால், பழைய குருடி கதவை திறடி என்று திராவிட கட்சிகளுடன் கூட்டு வைத்து கொண்டால் பத்தோடு பதினொன்று அவ்வளவுதான். அதைத்தான் திரு விஜயகாந்த் செய்தார். இன்று விலாசம் இல்லாமல் போனார்.
Rate this:
ஏடு கொண்டலு - Cupertino,யூ.எஸ்.ஏ
15 செப், 2017 - 10:59 Report Abuse
ஏடு கொண்டலு கேப்டன் கொஞ்ச நாளாக உடம்புக்கு முடியாம இருக்கறதுனால, தமிழ்நாட்டு அரசியல் காலத்துல காமெடிக்கு ஏற்பட்ட பஞ்சத்தை தீர்க்க சரியான ஆளு. கோடீஸ்வரக் கம்யூனிஸ்ட், பெரியாரிசம் பேசும் பார்ப்பனர், இப்படி குண்டக்க மண்டக்க ஆசாமிகளுக்கு கூட்டம் சேரும், வோட்டு சேராது.
Rate this:
Neelaa - Atlanta,யூ.எஸ்.ஏ
15 செப், 2017 - 04:36 Report Abuse
Neelaa ஐயோ புலி வருது புலி வருதுன்னு போக்கு இவ்வளவு வருஷமா காட்டிட்டு, இப்போ சந்தடி சாக்குல ஒரு எலி வந்துடும் போல இருக்கே? கூத்தாடிகளை விட்டா தமிழ் மக்களுக்கு லீடர் ஆக வேற ஆளுகளே இல்லையா?
Rate this:
Moorgan Ayyanar - Doha,கத்தார்
15 செப், 2017 - 00:27 Report Abuse
Moorgan Ayyanar முதலில் நீங்கள் உங்களை சுத்தப் படுத்துங்கள். உங்கள் மனைவி சரிகாவுடன் என்ன பிரச்சினை. அதனை சரி செய்யுங்கள். அதன்பின் பக்கத்து வீட்டுக்காரனைப் பாருங்கள். வீணாக நீயும் குழம்பி மற்றவர்களையும் குழப்பாதே. முதலில் நாட்டிற்கு உங்களால் என்ன செய்ய முடியும் என்பதை தெரியப்படுத்தவும். சும்மா கழுவிற மீனில் நழுவுற மாதிரி பேசக்கூடாது. தீர்க்கமான சிந்தனை தேவை. சினிமா வசனம் எடுபடாது. வடிவேலு காமெடி மாதிரி ஆயிடப்போவுது..
Rate this:
14 செப், 2017 - 21:56 Report Abuse
ParthasarathyVaradarajan 1532 ஓட்டுகள் கிடைக்கும் பாஸ்
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Gorilla
  • கொரில்லா
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : ஷாலினி பாண்டே
  • இயக்குனர் :டான் சாண்டி
  Tamil New Film Imaikkaa nodigal
  Tamil New Film ennai nokki paayum thotta
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in