வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது |
விஜய் ஆண்டனி தற்போது 'அண்ணாதுரை', 'காளி' என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் அறிமுக இயக்குனர் ஸ்ரீநிவாசன் இயக்கி வரும் 'அண்ணாதுரை' படம் தான் முதலில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை பகுதிகளில் நடைபெற்று வந்தது. இரண்டு பாடல்கள் தவிர இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் முடிந்துவிட்டதாம்.
'இந்திரசேனா' என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியாகவிருக்கும் 'அண்ணாதுரை'யின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இப்படத்தை மிக விரையில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு பட வேலைகளை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர். சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமாரின் 'ஆர்.ஸ்டுடியோஸ்' தயாரிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணாதுரை படத்தில் அண்ணாதுரை, தம்பிதுரை என விஜய் ஆண்டனி இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்.