ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்குத் திரையுலகில் மற்ற படங்களை பின்னுக்குத் தள்ளி 'அர்ஜுன் ரெட்டி' படம் தான் கடந்த பதினைந்து நாட்களுக்கும் மேலாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. இஞ்சினியரிங் படித்தவரான ஷாலின் நாடகங்களில் நடித்து அனுபவப்பட்டவர். 'அர்ஜுன் ரெட்டி' படம் அவருக்கு ஒரு சிறப்பான அறிமுகத்தைத் திரையுலகத்தில் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
தற்போது தெலுங்கு, தமிழில் தயாராகி வரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறான 'மகாநதி' படத்தில் நடிகை ஜமுனா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இதனிடையே, ஷாலினி தமிழுக்கும் வருகிறார் என்பது சமீபத்திய தகவல்.
தெலுங்கில் ஆறு வருடங்களுக்கு முன்பு வெளிவந்து சூப்பர் ஹிட்டான '100 பர்சென்ட் லவ்' படம் தமிழில் ரீமேக்காக உள்ளது. இப்படத்தின் நாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடிக்க உள்ளார். நாயகியாக முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்ட லாவன்யா திரிபாதி மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக தற்போது 'அர்ஜுன் ரெட்டி' நாயகி ஷாலின் பாண்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளிவந்துள்ளன. விரைவில் இது பற்றிய அறிவிப்பு வரலாம்.