Advertisement

சிறப்புச்செய்திகள்

தயாரிப்பாளர் தற்கொலை : அறிக்கையோடு இல்லாமல் தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா ? | அன்புச்செழியன் தலைமறைவு : தனிப்படை அமைப்பு | பாரதியாரின் தோற்றத்தில் முதல் ஊழல் ஆதாரம் வெளியிட்ட கமல் | சினிமாவை விட்டு ஓடி விடுங்கள் : கந்துவட்டி கும்பலுக்கு விஷால் எச்சரிக்கை | கந்து வட்டி கடனில் தவிக்கிறாரா சசிகுமார்? அசோக்குமாரின் கடிதத்தில் திடுக்கிடும் தகவல்கள் | 'பர்பிள்' நிற ஆடையுடன் பழையவர்கள்! | கந்துவட்டி கொடுமை : இயக்குனர் சசிகுமார் உறவினர் தற்கொலை | ஆந்திர ரசிகர்களின் ஆரவாரத்தைப் பெற்ற அனிருத் | 'ஜுலி 2' - தென்னிந்திய நடிகை ஒருவரின் உண்மைக் கதை ? | மோகன்லால் - ஷாஜி கைலாஷ் படம் பிப்ரவரியில் துவக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அடுத்த ஆண்டில் தான் அஜித்தின் அடுத்த படம்?

11 செப், 2017 - 18:12 IST
எழுத்தின் அளவு:
Ajiths-next-movie-will-happend-next-year-only?

விவேகம் படம் வெளிவந்து இரண்டு வாரங்கள் ஆகியுள்ள நிலையில் படத்தின் எதிர்பாராத தோல்வி அஜித்தின் ரசிகர்களுக்குக் கொஞ்சம் அதிர்ச்சியைக் கொடுத்தது. அதைவிட மற்றுமொரு அதிர்ச்சியாக அஜித்துக்கு நடந்த ஆபரேஷன் அமைந்துவிட்டது.

விவேகம் படத்திற்காக உடம்பை கடுமையாக ஏற்றி சண்டைக் காட்சிகளில் நடித்து முடித்ததால் அஜித்தின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கான அறுவை சிகிச்சை கடந்த வாரம் நடைபெற்றுள்ளது. அதனால், அஜித் குறைந்தது 3 மாதம் வரையிலாவது ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், அஜித்தின் அடுத்த படத்தின் வேலைகள் அடுத்த ஆண்டுதான் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.

விவேகம் பட வெளியீட்டிற்கு முன்பே அஜித்தின் அடுத்த படத்தையும் சிவாதான் இயக்கப் போகிறார் என செய்திகள் வந்தன. ஆனால் இப்போது அந்த முடிவில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா என்பது தெரியவில்லை. படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு அஜித், சிவா இடையிலான சந்திப்பு நடைபெற்றுள்ளது. அப்போது கூட அஜித், சிவாவிடம் அடுத்த கதையைத் தயார் செய்யுங்கள் என்று கூறியுள்ளதாகச் சொன்னார்கள்.

அஜித் 3 மாதம் ஓய்வெடுத்தாலும், அவருடைய உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது பற்றி ஐம்பது நாட்கள் கழித்த பின் பார்த்துதான் அடுத்த படத்தின் வேலைகள் ஆரம்பமாகும் என்கிறார்கள். இப்படித்தான் வேதாளம் படம் வெளிவந்ததும் அஜித் காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இப்போது விவேகம் படம் முடிந்ததும் தோளில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.

ஆரம்பம் படம் வெளிவந்த போதும் கூட முதுகில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அஜித்திற்கு தொடர் அறுவை சிகிச்சைகள் நடந்தாலும் அவர் நடிக்க வந்துவிட்டால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் நடித்துக் கொடுப்பார் என்பது தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் தெரியும்.

Advertisement
மணிரத்னம் படத்தில் எத்தனை நட்சத்திரங்கள்?மணிரத்னம் படத்தில் எத்தனை ... அண்ணன் மகள் கடத்தல்? : லலிதாகுமாரி கண்ணீர் பேட்டி அண்ணன் மகள் கடத்தல்? : லலிதாகுமாரி ...


வாசகர் கருத்து (6)

12 செப், 2017 - 12:29 Report Abuse
KrishnaMurthy சினிமா வேண்டாம் அஜித் உடம்பு பாத்துக்கங்க
Rate this:
12 செப், 2017 - 11:48 Report Abuse
ArunKumar விவேகம் தோல்வி படம் அல்ல ....முதலில் உண்மையான பதிவை போடவும்....இந்தியன் செய்தி நாளிதழ்களில் படம் வெற்றி ....தமிழில் மட்டும் நீங்கள் ஏன் அஜித் படத்தை தக்குகிறீர்கள்...160 கோடி மேல் வசூல் செய்த படம் தோல்வியா?
Rate this:
Arul - thanjavur,இந்தியா
12 செப், 2017 - 09:44 Report Abuse
Arul திரும்பவும் சிவாவா? அஜீத்துக்கு என்னதான் ஆச்சு?
Rate this:
Kalaiselvan Periasamy - kuala lumpur,மலேஷியா
12 செப், 2017 - 08:56 Report Abuse
Kalaiselvan Periasamy படத்தின் தோல்விக்கு காரணம் தரமற்ற இசையும் வசனங்களும் அல்லாமல் தமிழர்கள் எதிர்பார்த்த மசாலா வகைகளும் இல்லாததே.
Rate this:
shankar - chennai,இந்தியா
12 செப், 2017 - 03:40 Report Abuse
shankar epdi vfx la ethanadhu nalaya ?
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Julie 2
  • ஜூலி 2
  • நடிகை : லட்சுமி ராய்
  • இயக்குனர் :தீபக் ஷிவ்தாசினி
  Tamil New Film Velaikkaran
  • வேலைக்காரன்
  • நடிகர் : சிவகார்த்திகேயன்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :ஜெயம் ராஜா
  Tamil New Film Annadurai
  • அண்ணாதுரை
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : டயானா சம்பிகா
  • இயக்குனர் :ஸ்ரீனிவாசன்.ஜி
  Tamil New Film Dhuruva natchathiram

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in