ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கன்னடம் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வந்த ஸ்ருதி ஹரிகரன், லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய நெருங்கி வா முத்தமிடாதே படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அந்த படம் வெற்றி பெறாதால் மீண்டும் கன்னட சினிமாவுக்கே திரும்பினார்.
சமீபத்தில் வெளிவந்த நிபுணன் படத்தில் அர்ஜுன் மனைவியாக நடித்தார். தற்போது பாலாஜி சக்திவேல் இயக்கும் ரா ரா ராஜசேகர் படத்திலும், துல்கர் சல்மானுடன் சோலோ படத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர 4 கன்னட படங்களில் நடித்து வருகிறார்.
ஸ்ருதிஹரிகரன், ராம்குமார் என்ற நடன கலைஞரை காதலித்து வந்ததாகவும், இருவரும் ரகசிய திருணம் செய்து கொண்டிருப்பதாகவும் சாண்டல்வுட்டில் பரபரப்பாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் ஸ்ருதிஹரிகரன் அதை மறுத்துள்ளார்.
"இது வெறும் வதந்திதான். எனக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. நான் நடிப்பிலும், அவர் நடனத்திலும் பிசியாக இருக்கிறோம். இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை" என்று கூறியுள்ளார்.