ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஒன் ஹார்ட்' என்ற திரைப்படம் இந்தியாவின் முதல் இசைக் கச்சேரி திரைப்படமாக வெளியாகி இருக்கிறது. ஆங்கில மொழியில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் குழுவினர் அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த முதல் திரைப்படமான 'ரோஜா'வின் 'சின்ன சின்ன ஆசை...' பாடலில் இருந்து துவங்கி சமீபத்தில் வெளியான பாலிவுட் படமான 'ஹைவே' படப் பாடல் உட்பட தமிழில் மற்றும் ஹிந்தியில் தனது இசைக் குழுவினருடன் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து பாடுவதுபோன்ற காட்சிகள் எல்லாம் இந்தப் படதத்தில் இடம்பெற்றுள்ளன.
அதுமட்டுமல்ல, ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்குழுவில் இடம்பெற்றுள்ள இசைக்கலைஞர்களை எப்படி தேர்வு செய்தார்? இசைக்குழுவில் அவர்களது பங்களிப்பு குறித்த விஷயங்களையும் பாடல்களுக்கு இடையே ஏ.ஆர்.ரஹ்மான் விளக்குகிற காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. அதோடு, அந்த இசை கலைஞர்களும் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்றிய தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.
சுமார் ஒன்றரை மணி நேரம் ஓடும் இந்த படத்தின் முதல்பாதி ஏ.ஆர்.ரஹ்மானின் ஹிட் பாடல்களுடன் சுவாரஸ்யமாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் சுவாரஸ்யம் இல்லை. அது மட்டுமல்ல, சராசரி ரசிகனுக்கு மிக அன்னியமாக இருப்பதாகவும் விமர்சனம் செய்யப்படும் இந்தப்படம் தமிழகத்தில் 50க்கும் குறைவான தியேட்டர்களில் வெளியிடப்பட்டது.
தற்போதைய தகவலின்படி பல தியேட்டர்களில் இந்தப் படத்தை தூக்கிவிட்டு கதாநாயகன், நெருப்புடா படங்களை திரையிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.