14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளிவந்து தமிழ்நாட்டில் ஓடுகிறதோ இல்லையோ, அமெரிக்காவில் சூப்பர் ஹிட், ஆஸ்திரேலியாவில் பம்பர் ஹிட் என அளந்துவிடுவார்கள். பொதுவாக எந்த பெரிய நடிகர்களின் படங்கள் வெளிவந்தாலும் அமெரிக்காவைப் பொறுத்தவரை வசூல் விவரங்களை ஒரு டாலர் என்றால் கூட அவ்வளவு சரியாகச் சொல்வார்கள்.
ஆனால், 'விவேகம்' படத்தைப் பொறுத்தவரையில் படத்தை வாங்கி வெளியிட்ட நிறுவனம் 'விவேகம்' படத்தின் மொத்த வசூல் என்ன என்று இதுவரை சொல்லவில்லை. முதல் நாள் வசூலாக 517000 டாலர்கள் வசூலித்ததாக மட்டுமே அறிவித்தது. அதன் பின் எந்த விவரமும் வரவில்லை.
நாம் விசாரித்தவரையில் படம் அமெரிக்காவில் நஷ்டம் என்கிறார்கள். அதே சமயம் அந்தப் படத்துடன் வெளியான தெலுங்குப் படமான 'அர்ஜுன் ரெட்டி' இரண்டு வாரங்களில் 11 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. 'விவேகம்' படத்தை விட அமைதியாக வெளிவந்த 'அர்ஜுன் ரெட்டி' படம் அமெரிக்காவில் மட்டும் ஐந்து கோடிக்கும் மேல் லாபத்தைக் கொடுத்துள்ளதாம்.