ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய் நடித்த பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார் வடிவேலு. அந்த வகையில், அவர்கள் நடித்த பிரண்ட்ஸ், காவலன், சச்சின், வில்லு, சுறா, பகவதி, வசீகரா, போக்கிரி, வில்லு என பல படங்களில் அவர்களது காமெடி கூட்டணி பெரிய அளவில் ஒர்க்அவுட் ஆனது. இந்நிலையில், தெறி படத்திலும் காமெடியனாக வடிவேலுவை நடிக்க அழைத்தபோது மறுத்து விட்டார்.
ஆனால் இப்போது மெர்சல் படத்தில் மீண்டும் விஜய்யுடன் இணைந்திருக்கிறார் வடிவேலு. அதோடு, ஒரு சிறிய இடைவேளைக்குப்பிறகு கோவை சரளாவுடனும் இந்த படத்தில் இணைந்திருக்கிறார் வடிவேலு. மேலும், இந்த படத்தில் அவர் காமெடியனாக நடிக்கவில்லையாம். விஜய்யின் வளர்ப்புத்தந்தையாக வடிவேலு நடித்திருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் கோவைசரளா வளர்ப்பு அம்மாவாக நடித்திருக்கிறாராம். அந்த வகையில், இதுவரை விஜய்யுடன் காமெடியனாக மட்டுமே நடித்துள்ள வடிவேலு, இந்த படத்தில் குணசித்ர வேடத்தில் நடித்திருப்பதாக சொல்கிறார்கள்.