ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சதுரங்கவேட்டை-2, பாஸ்கர் ஒரு ராஸ்கல் படங்களைத் தொடர்ந்து அரவிந்தசாமி நடித்து வரும் படம் வணங்காமுடி. இந்த படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்து வரும் அரவிந்த்சாமியுடன், சிம்ரன், ரித்திகாசிங், நந்திதா, சாந்தினி என நான்கு நாயகிகள் நடிக்கிறார்கள். இந்த படத்தில் படமும் இதற்கு முன்பு செல்வா இயக்கிய நான் அவனில்லை படம் பாணியில் நான்கு நாயகிகளை மையமாகக் கொண்ட கதையில் தான் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்தபடியாக தூத்துக்குடியில் நடக்கிறது.
இந்த படத்திற்காக அரவிந்த்சாமி, சிக்ஸ்பேக் வைத்து நடிப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இதுகுறித்து அப்பட யூனிட்டை விசாரித்தபோது, இந்த படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்தபோதும், தனிப்பட்ட முறையில் உடலில் எந்த மாற்றமும் அவர் செய்யவில்லை. வழக்கமான அதே உடல்கட்டுடன் தான் நடிக்கிறார். வணங்காமுடிக்காக அரவிந்த்சாமி சிக்ஸ்பேக் வைத்து நடிக்கிறார் என்று வெளியாகியுள்ள செய்திகள் வதந்திதான் என்கிறார்கள்.