சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
கின்னஸ் சாதனை புகழ் நடிகையான ஆச்சி மனோரமா நடிக்க ஒப்பந்தமாகியிருந்த படம் பேராண்டி. இந்த படத்தில் பாட்டி வேடத்தில் அவர் நடிக்க கமிட்டானபோது, தனது குரலில் ஒரு பாடலும் பாடியிருந்தார். அதையடுத்து போட்டோ சூட்டும் நடந்தது. ஆனால் படப்பிடிப்பு நடக்கயிருந்தபோது அவர் இறந்து விட்டார். அதனால் இப்போது மனோரமா நடிக்கயிருந்த வேடத்தில் கோவை சரளா நடித்து வருகிறார்.
ஏற்கனவே கார்த்தி நடித்த கொம்பன் படத்திலேயே மனோரமா பாணியில் குணசித்ர நடிகையாக வேண்டும் என்கிற முயற்சியில் இறங்கிய கோவை சரளா, இந்த பேராண்டி படத்தில் காமெடியில் இருந்து விடுபட்டு, காமெடி கலந்த குணசித்ர வேடத்தில் மனோரமா பாணியில் நடித்து வருகிறார். மேலும், இந்த படத்திற்காக மனோரமா பாடிய பாடலும் பயன்படுத்தப்படுகிறது. அந்த பாடலுக்கு கோவை சரளா நடிக்கும் படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளதாம்.