ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது | ரூ.200 கோடியை தொட்ட தொடரும் | மூன்று நகைச்சுவை நடிகர்கள் மோதும் மே 16 | என்டிஆர் குடும்பத்தின் நான்காவது தலைமுறை நடிகர் அறிமுகம் | அப்பா இசையில் முதல் தெலுங்குப் பாடல் பாடிய யுவன்ஷங்கர் ராஜா | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - செப்டம்பர் 18 வெளியீடு |
விஜய் தொலைக்காட்சியில் மிக விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் தொடர் தமிழ் கடவுள் முருகன். ராமாயாணம், மகாபாரதம் போன்ற புராண தொடர்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் முதன் முதலாக தமிழ் கடவுள் முருகனின் வரலாற்றையும், பெருமையையும் சொல்லும் தொடராக தமிழ் கடவுள் முருகன் தயாராகி வருகிறது.
இந்த தொடர் முழுக்க முழுக்க மும்பையில் பிரமாண்ட செட்கள் அமைத்து அதி நவீன தொழில்நுட்பத்தில் உருவாகிறது. சுமார் 50 கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் நிபுணர்கள் இதில் பணியாற்றி வருகிறார்கள். லைவ் சிஸ்டம் என்ற முறையில் வசனங்கள் நடிக்கும்போதே பதிவு செய்யப்படுகிறது. இதனால் டப்பிங் வேலைகள் இல்லை. தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என சுமார் 100 பேர் மும்பையில் முகாமிட்டிருக்கிறார்கள்.
தொடர் சம்பந்தமாக விஜய் டி.வி டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் செய்யப்பட்டுள்ள கிராபிக்ஸ் வேலைகள் ஹாலிவுட் பட ரேன்ஞ்சுக்கு இருப்பதை கண்டு மற்ற சேனல்காரர்களே மிரண்டு போயிருக்கிறார்கள். சீரியலுக்கான எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் டீசர் ஏற்படுத்தி உள்ளது. முருகன் மயில்மீது அமர்ந்து பறந்து வரும் காட்சிகள் அவதார் படத்தை நினைவூட்டுகிறது. சூரபத்மன் சிவனிடம் சாகாவரம் கேட்டு அவரை எதிர்த்து நிற்பதும், சூரபத்மனை அழிக்க சிவன் முருகனை பிறக்கச் செய்வதுமான கதையை டீசர் சொல்லுகிறது. தமிழ் சின்னத்திரை வரலாற்றில் தமிழ் கடவுள் முருகன் தொடர் முக்கியமானதாக இருக்கும் என்கிறார்கள்.