ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவில் அரிதாக பயன்படுத்தப்படும் கதாபாத்திரம் தான் மேஜிக் மேன் கதாபாத்திரம். ஒரு சிலரை தவிர கண்ணுக்கெட்டிய வரையில் பிரபல நடிகர்கள் யாரும் ஒரு மேஜிக்மேன் கதாபாத்திரத்தில் நடித்ததாக தெரியவில்லை. இந்தநிலையில் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் மெர்சல் படத்தில் கிராமத்து இளைஞர், மேஜிக் நிபுணர் மற்றும் மருத்துவர் என மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் விஜய். இதில் மேஜிக் நிபுணர் கதாபாத்திரத்துக்காக ஹாலிவுட் மேஜிக் நிபுணர்களிடம் பயிற்சி எடுத்திருக்கிறார் விஜய்.
அதேசமயம் நடிகர் தனுஷும் தற்போது ஒரு படத்தில் மேஜிக்மேன் கேரக்டரில் நடித்துள்ளார் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. ஆனால் தமிழில் அல்ல... ஹாலிவுட் படத்தில். 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்' என்கிற பெயரில் கனடா நாட்டைச் சேர்ந்த கென் ஸ்காட் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் அது. ரொமான்டிக் காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்தில் அஜாதசத்ரு எனும் கேரக்டரில் தனுஷ் நடிக்கிறார்.. இதில் இவருக்கு தெருவில் மேஜிக் நிகழ்ச்சி நடத்தும் மேஜிக் கலைஞர் வேடமாம்.