ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெறி படத்தை அடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மெர்சல். இந்த படத்தின் போஸ்டரில் விஜய்யை ஜல்லிக்கட்டு வீரராக வெளிப்படுத்தியதை அடுத்து படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி நிற்கிறது. மேலும், விஜய் படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த மெர்சல் படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ள ஸ்ரீதேனாண் டாள் பிலிம்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் அதிகப்படியான தியேட்டர்களில் மெர்சல் படத்தை வெளியிடுகிறது.
மேலும், மெர்சல் படத்தின் ஆடியோ விழா நடைபெற்றபோதே, விரைவில் டீசர் வெளியிடப்படும் என்று கூறினார் விஜய். ஆனால் இப்போதுவரை வெளியாகவில்லை. இதனால் விஜய் ரசிகர்கள் அப்படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்சின் இணைய பக்கத்திற்குள் சென்று மெர்சல் டீசர் எப்போது வெளிகிறது என்று கேட்டு வருகிறார்களாம்.
இதையடுத்து, மெர்சல் பட தயாரிப்பாளரான ஹேமா ருக்குமணி, ரிலாக்சாக இருங்கள். உங்களது காத்திருப்புக்கு தகுதியான மெர்சல் டீசர் விரைவில் வெளியிடப்படும் என்று தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.