ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒளிப்பதிவாளர் பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கி உள்ள படம் அபியும் அனுவும். மலையாள நடிகர் டோவினோ தாமஸ், பியா பாஜ்பய், ரோகினி நடித்துள்ளனர். இதில் பியா படத்துக்காக மொட்டை போட்டு நடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
இந்த படமும் இந்த கதாபாத்திரமும் எனக்கு கிடைத்ததை மிகவும் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இப்படத்தின் இயக்குனர் விஜயலக்ஷ்மி எனக்கு போன் பண்ணி இப்படத்தின் கதையை கூறியபொழுது அது என்னை மிகவும் கவர்ந்தது, அதனால் இதில் நடிக்க உடனே ஒப்புக் கொண்டேன். எனக்கு மட்டும் இல்லாமல், எந்த ஒரு நடிகைக்கும் இது போன்ற ஒரு கதாபாத்திரம் கிடைப்பது அரிய காரியமே, அதனாலேயே இப்படத்தில் நடிக்க உடனே ஒப்புக்கொண்டேன்.
இக்கதையின் ஒரு பகுதிக்காக நான் மொட்டையடிக்க வேண்டும் என்று இருந்தது. இயக்குனர் அதற்குரிய விசேஷ மேக்அப் இருக்கிறது. அதை பயன்படுத்தி தலையை மொட்டை அடித்தது போன்று காட்டிக் கொள்ளலாம் என்றார். ஆனால் கதைக்கு உயிரோட்டமாக இருக்க வேண்டும் என்றால் நான் நிஜமாகவே மொட்டை போட்டுக் கொள்ள வேண்டும் என்றேன். அதற்கு அவர் எனக்கும் அப்படித்தான் தோன்றியது.
ஆனால் எந்த பெண், அதுவும் நடிகை சம்பதிப்பார் என்றுதான் தயங்கினேன் என்றார். தோற்றத்தையும் மீறி ஒரு நல்ல நடிகை பெயர் வாங்க முடியும் என்று நம்புபவள் நான். அதனால் துணிந்த மொட்டை அடித்துக் கொண்டேன். இந்த துணிச்சலான, அழகான காதல் கதையை மிகவும் ரசிப்பார்கள் என நம்புகிறேன். தமிழ் சினிமாவின் காதல் காவியங்களின் பட்டியலில் அபியும் அனுவும் நிச்சயம் சேரும் என நம்பிக்கையோடு உள்ளேன். என்கிறார் பியா.