14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
கனிமொழி, நளனும் நந்தினியும், பர்மா ஆகிய படங்களில் நாயகனாக நடித்தவர் மைக்கேல். இவர் தற்போது பதுங்கி பாயனும் தல -என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் அஜித்தின் தீவிரமான ரசிகராக மைக்கேல் நடித்திருக்கிறாராம். இன்றைய அஜித் ரசிகர்கள் அவர் நடித்த ஒவ்வொரு படங்களும் வெளியாகும்போது எந்த மாதிரியெல்லாம் கொண்டாடி மகிழ்கிறார்கள் என்பதுபோன்ற அனைத்து விசயங்களும் இந்த படத்தில் இடம் பெற்றிருக்கிறதாம்.
அதேசமயம், இணையதளங்களில் அஜித், விஜய் ரசிகர்கள் மோதுவது பற்றிய விசயங்களும் இடம் பெற்ற போதும், அவற்றை காரசாரமாக சொல்லாமல் காமெடியாக சொல்லியிருக்கிறார்களாம். அந்த வகையில், பதுங்கி பாயனும் தல படம் விஜய் ரசிகர்களுக்கும் பிடிக்குமாம். இந்த படத்தைப்பார்த்தால் விஜய்-அஜித் ரசிகர்களுக்கிடையேயான பகை உணர்வு மறைந்து நண்பர்களாகி விடுவார்களாம்.