லாரன்ஸ் உடன் இணையும் மாதவன், நிவின் பாலி | பிறந்தநாளில் சூர்யா 45 பட அப்டேட் | மோகன்லாலின் மலையாள படப்பிடிப்புக்கு விசிட் அடித்த நெல்சன் : ஜெயிலர் 2விலும் நடிப்பது உறுதி | காந்தாரா படப்பிடிப்பில் ஆற்றில் மூழ்கி துணை நடிகர் உயிரிழப்பு | எளிமையாக நடைபெற்ற ரெமோ வில்லனின் திருமணம் | ரெட்ரோ படப்பிடிப்பில் காயம் அடைந்த சிறுமிக்கு உதவிக்கரம் நீட்டிய மம்முட்டி | கலைஞர்களுக்காகவே உருவாக்கப்பட்ட 'குங்குனாலோ' செயலி | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நடிக்கிறாரா சமந்தா? அவரே வெளியிட்ட தகவல் | பெயரை மாற்ற போகிறாரா தெலுங்கு நடிகர் நானி? | விஜய் பிறந்தநாளில் 'ஜனநாயகன்' அறிமுக டீசர் வெளியாகிறது? |
மக்காஏல, மஸ்காரா போட்டு மயக்குறியே உள்பட பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியவர் பிரியன். இன்றைய காலகட்டத்தில் பாடலாசிரியருக்கு ஒரு தனித்துவம், அடையாளம் தேவைப்படுகிறது என்பதால், ஒவ்வொரு பாடல்களை எழுதும்போதும் வித்தியாசமான வார்த்தைகளுக்காக தான் ரொம்பவே மெனக்கெடுகிறேன் என்கிறார் பிரியன். இதுப்பற்றி அவர் மேலும் கூறியதாவது...
காதலில் விழுந்தேன் படத்தில் டோலே டோலே, நினைத்தாலே இனிக்கும் படத்தில் செக்ஸ் லேடி, உத்தமபுத்திரனில் உஸ்மிலரசு, நான் படத்தில் மக்காஏல என்று எனது ஹிட் லிஸ்ட் நீண்டுகொண்டே போகிறது. இதில் டோலே டோலே, செக்ஸ் லேடி, மக்கா ஏல, மஸ்காரா போட்டு மயக்குறியே இது எல்லாம் விஜய் ஆண்டனி பேட்டன்.
அதாவது ஒரு காலத்தில் எஸ்.பி.பி பாடியது, ஜேசுதாஸ் பாடியது என்று சொல்லி விடுவார்கள். அதேபோல் இது கண்ணதாசன் பாட்டு. வாலி பாட்டு, பட்டுக்கோட்டை பாட்டு என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நிறைய பேரு பாடல் எழுத வந்து விட்டார்கள். அது நல்லதுதான். என்றாலும், நாம் தனியாக தெரிய வேண்டுமல்லவா. அதற்காகத்தான் இந்த மாதிரியான வித்தியாசமான வார்த்தைகள் தேவைப்படுகிறது. அதற்குத்தான் மக்கா ஏல, செக்ஸ்லேடி போன்ற பாடல்கள் தேவைப்படுகிறது.
அதேமாதிரியாக மட்டுமே போக முடியாது. அதனால் தான் பிச்சைக்காரனில் உனக்காக வருவேன் உயிர்கூடதருவேன், கோலிசோடாவில் ஜனனம் ஜனனம் இப்படி மெல்லிசை பாடல்களும் எழுதியிருக்கிறேன். முக்கியமாக சமூகத்தில் நம்மை அடையாளப்படுத்திக் கொள்ள வித்தியாசமான சில விசயங்களை செய்ய வேண்டியுள்ளது.
அதோடு, இன்றைய காலகட்டத்தில் தத்துவப்பாடல்கள் எழுத போதுமான களம் கிடையாது, 90 சதவிகிதம் காதல் பாடல்களாகத்தான் எழுத வேண்டியுள்ளது. வருசத்துக்கு 600 காதல் பாடல்கள் வருகிறதென்றால் அதில் நாம் தனித்து நிற்க வேண்டுமல்லவா, அதற்காகத்தான் வழக்கமாக இல்லாமல் வித்தியாசமான வார்த்தைகளாக தேட வேண்டியுள்ளது.
நான் செய்த அந்த சின்ன மாறுதல் ரொம்ப புதுமையாக தெரிகிறது. இருக்கிற விசயத்தை வித்தியாசமாகவும், புதுமையாகவும் சொல்ல வேண்டும் என்று மெனக்கெடுகிறேன் என்கிறார் பாடலாசிரியர் பிரியன்.