ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்சினிமாவில் நடிகர் நடிகைகள் பின்னணி பாடுவது ஒன்றும் புதிய விஷயமல்ல. கடந்த காலங்களில் எத்தனையோ நடிகர், நடிகைகள் இப்படி பாடியுள்ளனர். இன்றைய இளம் தலைமுறை நடிகர்களில் பின்னணி பாடுவதில் அதிகம் ஆர்வம் காட்டுபவர் சிம்பு. அவரைப்போலவே விஜய்சேதுபதியும் சொந்தக்குரலில் பாடுவதற்கு அதிகமாக ஆர்வம் காட்டுகிறார்.
'ஆரஞ்சு மிட்டாய்' படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்த விஜய்சேதுபதி அந்தப்படத்தில் பாடல் ஒன்றைப் பாடினார். அதனைத் தொடர்ந்து 'ஹலோ நான் பேய் பேசுகிறேன்' படத்திலும் ஒரு பாடலைப் பாடினார். இப்போது கௌரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் 'இப்படை வெல்லும்' படத்திற்காகவும் ஒரு பாடலை பாடியிருக்கிறார் விஜய்சேதுபதி.
மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடித்திருக்கும் 'இப்படை வெல்லும்' படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இமானின் வேண்டுகோளுக்காகவே இப்படை வெல்லும் படத்திற்காக பாடலைப் பாட சம்மதம் தெரிவித்தாராம் விஜய்சேதுபதி. அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் இயக்குநர் கௌரவ் நாராயணன்.