சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
அஜித் நடித்து இதுவரை வெளிவந்த படங்களில் 2015ம் ஆண்டு வெளிவந்த 'வேதாளம்' படம் தான் முதலிடத்தில் இருந்தது. அந்தப் படத்தின் மொத்த வசூல் 120 கோடி ரூபாய். அதை 'விவேகம்' படம் ஒரு வாரத்தில் முறியடித்திருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'விவேகம்' படம் கடந்த வாரம் 24ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ஒரு வார முடிவில் இதுவரை 125 கோடி வரை வசூலித்துள்ளது என்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இதுவரை 64 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இருந்தாலும் தமிழ்நாடு ஏரியாவில் லாபத்தைத் தர குறைந்தது 25 கோடியாவது இன்னும் வசூலிக்க வேண்டுமாம். அதே சமயம், மற்ற மாநிலங்களில் இப்படம் லாபத்தைக் கொடுத்து வருவதாகவும் சொல்கிறார்கள்.
கர்நாடக மாநிலத்தின் வினியோக உரிமை சுமார் 5 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. வசூல் ஒரு வாரத்தில் 10 கோடியைக் கடந்துள்ளது. தெலுங்கு உரிமை சுமார் 4 கோடிக்கு விற்கப்பட்டு வசூல் 7 கோடியைத் தாண்டியுள்ளது. கேரளாவில் சுமார் 3 கோடிக்கு விற்கப்பட்ட படம் 4.5 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. அங்கு நஷ்டம் வர வாய்ப்புகள் அதிகம்.
வெளிநாடுகளைப் பொறுத்தவரையில் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஐரோப்பிய நாடுகளில் மட்டும் படத்தின் வசூலில் லாபம் வந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளில் நஷ்டம் வரலாம்.
படத்திற்கு கடுமையான விமர்சனங்கள் வந்த நிலையில் ஒரு வாரத்தில் இவ்வளவு வசூலித்ததே 'விவேகம்' படத்திற்கு சாதனைதான் என திரையுலகத்தில் தெரிவிக்கிறார்கள். படத்தை இன்னும் தரமாக எடுத்திருந்தால் வசூல் கண்டிப்பாக அதிகம் இருந்திருக்கம் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.