Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'வேதாளம்' வசூலைக் கடந்த 'விவேகம்' ?

01 செப், 2017 - 10:01 IST
எழுத்தின் அளவு:
Vivegam-beats-Vedalams-total-collection-in-a-week.?

அஜித் நடித்து இதுவரை வெளிவந்த படங்களில் 2015ம் ஆண்டு வெளிவந்த 'வேதாளம்' படம் தான் முதலிடத்தில் இருந்தது. அந்தப் படத்தின் மொத்த வசூல் 120 கோடி ரூபாய். அதை 'விவேகம்' படம் ஒரு வாரத்தில் முறியடித்திருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

'விவேகம்' படம் கடந்த வாரம் 24ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ஒரு வார முடிவில் இதுவரை 125 கோடி வரை வசூலித்துள்ளது என்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இதுவரை 64 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இருந்தாலும் தமிழ்நாடு ஏரியாவில் லாபத்தைத் தர குறைந்தது 25 கோடியாவது இன்னும் வசூலிக்க வேண்டுமாம். அதே சமயம், மற்ற மாநிலங்களில் இப்படம் லாபத்தைக் கொடுத்து வருவதாகவும் சொல்கிறார்கள்.

கர்நாடக மாநிலத்தின் வினியோக உரிமை சுமார் 5 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. வசூல் ஒரு வாரத்தில் 10 கோடியைக் கடந்துள்ளது. தெலுங்கு உரிமை சுமார் 4 கோடிக்கு விற்கப்பட்டு வசூல் 7 கோடியைத் தாண்டியுள்ளது. கேரளாவில் சுமார் 3 கோடிக்கு விற்கப்பட்ட படம் 4.5 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. அங்கு நஷ்டம் வர வாய்ப்புகள் அதிகம்.

வெளிநாடுகளைப் பொறுத்தவரையில் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஐரோப்பிய நாடுகளில் மட்டும் படத்தின் வசூலில் லாபம் வந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளில் நஷ்டம் வரலாம்.

படத்திற்கு கடுமையான விமர்சனங்கள் வந்த நிலையில் ஒரு வாரத்தில் இவ்வளவு வசூலித்ததே 'விவேகம்' படத்திற்கு சாதனைதான் என திரையுலகத்தில் தெரிவிக்கிறார்கள். படத்தை இன்னும் தரமாக எடுத்திருந்தால் வசூல் கண்டிப்பாக அதிகம் இருந்திருக்கம் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.

Advertisement
மனிதர்களால் ஒருபோதும் கடவுளாக முடியாது : ஏ.ஆர்.ரஹ்மான்மனிதர்களால் ஒருபோதும் கடவுளாக ... புரியாத புதிர் படத்துக்கு கோர்ட் தடை புரியாத புதிர் படத்துக்கு கோர்ட் தடை


வாசகர் கருத்து (4)

Naam thamilar - perth,ஆஸ்திரேலியா
01 செப், 2017 - 14:15 Report Abuse
Naam thamilar காசா பணமா நீ அடிச்சு விடு ராசா. நீ எதுக்கப்பா வெட்க படுறா, படம் எடுத்தவங்களை வெட்க படல.
Rate this:
Raja -  ( Posted via: Dinamalar Android App )
01 செப், 2017 - 12:13 Report Abuse
Raja அடப்பாவிங்களா, வேதாளம் படத்துல அப்படி என்ன இருக்கும் 120 கோடி வசூலிக்க, பொய் சொல்றதுக்கும் ஒரு மனசாட்சி வேணாமா?
Rate this:
01 செப், 2017 - 11:01 Report Abuse
Kalyanaraman கேரளாவில் 3கோடிக்கு விற்கப்பட்டு 4.5கோடி வசூலித்தால் அது எப்படி நஷ்டமாகும்?
Rate this:
Vijay Raj - Chennai,இந்தியா
01 செப், 2017 - 10:31 Report Abuse
Vijay Raj வேதாளம் 120 கோடியா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Karuppan
    • கருப்பன்
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : தன்யா ரவிச்சந்திரன்
    • இயக்குனர் :பன்னீர்செல்வம்
    Tamil New Film Theeran Adhigaram Ondru
    Tamil New Film Nadodi Kanavu
    • நாடோடி கனவு
    • நடிகர் : மகேந்திரன்
    • நடிகை : சுப்ரஜா
    • இயக்குனர் :வீரசெல்வா
    Tamil New Film Mersal
    • மெர்சல்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :அட்லீ

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in