Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினிகாந்த்தை விட ஓவியாவிற்கு மவுசு அதிகம் ?

29 ஆக, 2017 - 11:43 IST
எழுத்தின் அளவு:
Oviya-beats-Rajini.?

திரையுலக நட்சத்திரங்கள் அனைவருக்குமே மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடிக்க வேண்டும் என முயன்று கொண்டிருக்கிறார்கள். அனைவருக்குமே அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்துவிடாது. ஒரு சிலர் மட்டுமே என்ன ஆனாலும் சரி, ரசிகர்களின் மனதில் இருந்து நீங்காத இடத்தைப் பிடித்திருப்பார்கள். அப்படி மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்த தலைவர்களுள் எம்ஜிஆர் ஒருவர். திரையுலக ரசிகர்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்த நடிகர்களுள் ரஜினிகாந்த் ஒருவர்.

ஆனால், ரஜினிகாந்த்தையும் தாண்டி இன்று ஓவியா, மிகவும் பிரபலமாகி மக்கள் மனதில் ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்து விட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. இத்தனைக்கும் அவர் சூப்பர் ஹிட் படங்கள் கொடுக்கவில்லை. பிக் பாஸ் என்ற ஒரே ஒரு டிவி நிகழ்ச்சியில் மட்டுமே கலந்து கொண்டார். நிகழ்ச்சி ஆரம்பமான சில நாட்களில் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கும் கமல்ஹாசனையும் மிஞ்சும் அளவிற்கு புகழ் பெற்றார். நிகழ்ச்சியை விட்டு அவர் விலகினாலும், இன்னமும் ஓவியா பற்றி பிக் பாஸ் வீட்டில் பேசிக் கொண்டுதானிருக்கிறார்கள். மக்களும் ஓவியா பற்றி அவர்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதற்கு சரியான உதாரணம் நேற்று நடந்திருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் நேற்று முதல் முறையாக ஓவியா டுவிட்டரில் வந்து ஒரு பதிவைப் போட்டார். அந்தப் பதிவிற்கு 24 மணி நேரத்திற்குள்ளாக 43 ஆயிரம் லைக்குகளும், 13 ஆயிரம் ரிடுவீட்டுகளும், 7700 கமெண்ட்டுகளும் இதுவரை கிடைத்துள்ளன.

அதே சமயம், டுவிட்டரில் ரஜினிகாந்த் '2.0' மேக்கிங் வீடியோவை ஷேர் செய்ததற்கு அவருக்கு 28 ஆயிரம் லைக்குகளும், 8800 ரீ-டுவீட்டுகளும், 2200 கமெண்ட்டுகளும் மட்டுமே இதுவரை கிடைத்துள்ளன.

இப்போதெல்லாம் சமூக வலைத்தள கணக்குகள் தான் சாதனையாகவும், ஒருவரைப் பற்றிய தனி அடையாளத்தையும் கொடுக்கின்றன. அந்த விதத்தில் பார்த்தால் இப்போதைக்கு ரஜினிகாந்தை விட ஓவியாவுக்குத்தான் மவுசு அதிகம் என்பது மறுக்க முடியாத உண்மை.

Advertisement
அமீர் நடிக்கும் அரசியல் படம் எம்.ஜி.ஆர் பாண்டியன்அமீர் நடிக்கும் அரசியல் படம் ... மீண்டும் ஆர்த்தி, ஜுலி, பிக் பாஸ் நாடகம் அரங்கேறுமா ? மீண்டும் ஆர்த்தி, ஜுலி, பிக் பாஸ் ...


வாசகர் கருத்து (7)

Raman Ganesan - Madurai,இந்தியா
29 ஆக, 2017 - 15:07 Report Abuse
Raman Ganesan MGR 5 லட்சம் கூட சம்பளம் வாங்கல ரஜினி ஒரு படத்துக்கு 100 கோடி வாங்குறார் அப்ப MGR விட ரஜினி பெரிய ஆளு அப்படினு சொல்லலாமா
Rate this:
29 ஆக, 2017 - 14:48 Report Abuse
oviyaarmy antha likes and retweets la nanum iruken
Rate this:
Vijay Kumar - Chennai,இந்தியா
29 ஆக, 2017 - 14:00 Report Abuse
Vijay Kumar அப்ப கமல் மக்கள் மனதில் இடம் பிடிக்கவில்லயா என்ன? ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கமல் ரசிகர் இருப்பார்.
Rate this:
Saravanan - Chennai,இந்தியா
29 ஆக, 2017 - 13:45 Report Abuse
Saravanan மகிழ்ச்சி, அப்போ பிஜேபி கிட்டே சொல்லி தமிழ் நாடு - politics கு வர சொல்லுங்க
Rate this:
Dol Tappi Maa - NRI,இந்தியா
29 ஆக, 2017 - 13:42 Report Abuse
Dol Tappi Maa பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் பணத்திற்காகவோ அல்லது தமிழன் வளர்க்கூடாது என்று ரஜினியை விளம்பர படுத்தி தூக்கி விடுகின்றனர் .
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Karu
  • கரு
  • நடிகை : சாய் பல்லவி
  • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
  Tamil New Film Pariyerum perumal
  Tamil New Film Kaala
  • காலா
  • நடிகர் : ரஜினிகாந்த்
  • நடிகை : ஹூயூமா குரேஷி
  • இயக்குனர் :பா.ரஞ்சித்
  Tamil New Film JagaJaala Killaaddi
  • ஜகஜால கில்லாடி
  • நடிகர் : விஷ்ணு விஷால்
  • நடிகை : நிவேதா பெத்ராஜ்
  • இயக்குனர் :எழில்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in