Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தெலுங்கில் 'விஐபி 2'வை வசூலில் மிஞ்சும் 'விவேகம்'

28 ஆக, 2017 - 17:45 IST
எழுத்தின் அளவு:
Vivegam-good-collection-comparing-to-Vip-2-in-Tollywood

தமிழ்ப் படங்கள் தெலுங்கில் டப்பிங் ஆகி வெளியாவது சமீப காலங்களில் விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தெலுங்கிலிருந்து தமிழுக்கு டப்பிங் ஆகி வெளிவரும் படங்களை மக்களிடம் சரியாகக் கொண்டு போய் சேர்க்காததால் அவை இங்கு பெரிதாக கண்டு கொள்ளப்படுவதில்லை. சில லட்சங்களை மட்டுமே வசூலித்து காணாமல் போய்விடுகின்றன.


ஆனால், தமிழ்ப் படங்கள் தெலுங்கில் டப்பிங் ஆகும் போது படம் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் ஐதராபாத்திற்குச் சென்று படத்தின் பிரமோஷனையும் தவறாமல் செய்கிறார்கள். தமிழில் ஆகஸ்ட் 11ம் தேதி வெளிவந்த 'விஐபி 2' திரைப்படம் தெலுங்கில் இரண்டு வாரங்கள் கழித்து 25ம் தேதியன்று வெளியானது. அதற்கு ஒரு நாள் முன்னதாக 'விவேகம்' படம் தெலுங்கில் வெளியானது.


இரண்டு டப்பிங் படங்கள் ஒரே சமயத்தில் வெளியாவதால் தெலுங்குத் திரையுலகில் கொஞ்சம் பரபரப்பு இருந்தது. மேலும், 'விஐபி 2' படத்தின் முதல் பாகம் தெலுங்கில் 'ரகுவரன் பிடெக்' என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு நல்ல வசூலைக் கொடுத்தது. அதனால், இரண்டாம் பாகமான 'விஐபி 2'க்கும் நல்ல வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், படம் தெலுங்கு ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் 'விஐபி 2' படத்தைப் பார்ப்பதை விட 'விவேகம்' படத்தைப் பார்க்க ஆசைப்பட்டுள்ளார்கள். அதனால், 'விஐபி 2' படத்தை விட 'விவேகம்' படத்திற்கு நல்ல வசூல் கிடைத்து வருவதாக டோலிவுட்டில் சொல்கிறார்கள். இத்தனைக்கும் தனுஷ், கஜோல், சௌந்தர்யா ஆகியோர் அங்கு பிரமோஷன் எல்லாம் செய்தார்கள். விவேகம் படத்திற்காக ஒரு நிகழ்ச்சி கூட அங்கு நடக்கவில்லை.


அஜித்தின் டப்பிங் படம் ஒன்று தெலுங்கில் இந்த அளவிற்கு வசூலிப்பதும் அங்குள்ள அஜித் ரசிகர்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 4 கோடி வரை படம் வசூலித்துள்ளது என்கிறார்கள். கடந்த வாரம் வெளிவந்த நேரடித் தெலுங்குப் படமான 'அர்ஜுன் ரெட்டி' தெலுங்கு பாக்ஸ் ஆபிசில் முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில், 'விவேகம்' படம் நான்காவது இடத்தையும், 'விஐபி 2' படம் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement
2.O படத்தின் தெலுங்கு விற்பனை எத்தனை கோடி தெரியுமா?2.O படத்தின் தெலுங்கு விற்பனை எத்தனை ... சோழன் பயணம் தொடரும் - செல்வராகவன் சோழன் பயணம் தொடரும் - செல்வராகவன்


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mannar Vagaiyara
    • மன்னர் வகையறா
    • நடிகர் : விமல்
    • நடிகை : ஆனந்தி
    • இயக்குனர் :பூபதி பாண்டியன்
    Tamil New Film Iravukku Aayiram Kangal
    Tamil New Film Seyaal Movie
    • செயல்
    • இயக்குனர் :ரவி அப்புலு
    Tamil New Film Kombu
    • கொம்பு
    • நடிகர் : லொள்ளுசபா ஜீவா
    • நடிகை : திஷா பாண்டே
    • இயக்குனர் :இ. இப்ராகிம்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in