Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'விவேகம்' வசூல் எப்படி இருக்கிறது ?

28 ஆக, 2017 - 15:17 IST
எழுத்தின் அளவு:
How-is-Vivegam-collection?

பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் போன வாரம் 24ம் தேதியன்று 'விவேகம்' படம் வெளியானது. அஜித் இதற்கு முன்பு நடித்து வெளிவந்த படங்களைக் காட்டிலும் இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. படம் வெளியானதும் முதல் காட்சியைப் பார்க்க அஜித் ரசிகர்கள் பேரார்வம் காட்டினார். அதனால் ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் விற்றாலும் கூட அதைப் பற்றிக் கவலைப்படாமல் வாங்கிப் பார்த்தனர். விடியற்காலை காட்சிகளும் பல தியேட்டர்களில் நடைபெற்றது.


முதல் நாள் வசூலாக பலரும் 17 கோடி ரூபாய் வரை சொன்னாலும் காலையில் விற்கப்பட்ட 1000 ரூபாய் டிக்கெட் கட்டணங்களையும் சேர்த்து கணக்கிட்டால் முதல் நாள் வசூல் 20 கோடியைத் தொட்டிருக்கும் என்கிறார்கள். தொடர்ந்து வந்த மூன்று விடுமுறை தினங்களிலும் இப்படத்தின் தமிழ்நாடு வசூல் சராசரியாக 15 கோடிக்கு இருந்ததால் நான்கு நாட்களில் சுமார் 55 கோடி முதல் 60 கோடி வரை வசூலித்திருக்கும் என்ற தகவல் திரையுலக வட்டாரங்கள் மூலம் கிடைத்தது.


தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான இந்தப் படம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் அஜித்தின் முந்தைய படங்களை விட ஓரளவிற்கு வரவேற்பைப் பெற்றுள்ளது. கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் நல்ல வசூலைக் கொடுத்துள்ளதால் அங்கு படம் வசூல் ரீதியாக தப்பித்துவிடும் என்கிறார்கள்.


வெளிநாடுகளில் பொதுவாக அஜித்தின் படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும். அது இந்தப் படத்திலும் இன்னும் அதிகமாகத் தொடர்ந்துள்ளது. வெளிநாடுகளில் அமெரிக்காவில் மட்டும் 3 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளில் தமிழர்கள் அதிகம் வசிப்பதால் படத்திற்கு அங்கெல்லாம் நல்ல வசூல் கிடைத்துள்ளது. மூன்று நாடுகளிலும் சேர்த்து சுமார் 11 கோடி வரை வசூலித்துள்ளது.


ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அரபு நாடுகளில் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்றுள்ளது. மொத்தமாக உலக நாடுகளையும் சேர்த்தால் முதல் நான்கு நாட்களுடன் முடிந்த முதல் வார இறுதியில் 'விவேகம்' படம் 105 கோடி முதல் 110 கோடி வரை வசூலித்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.


இன்று முதல் ஆரம்பமாகும் வார நாட்களிலும், வரும் வார இறுதி நாட்களிலும் வசூலாகும் தொகையைப் பொறுத்தே இப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வெற்றி நிர்ணயிக்கப்படும்.


Advertisement
'பிக் பாஸ்' - மக்கள் மீது கமல்ஹாசன் கோபம் : ஆர்த்தி - ஜூலி ரீ-என்ட்ரி'பிக் பாஸ்' - மக்கள் மீது கமல்ஹாசன் ... 2.O படத்தின் தெலுங்கு விற்பனை எத்தனை கோடி தெரியுமா? 2.O படத்தின் தெலுங்கு விற்பனை எத்தனை ...


வாசகர் கருத்து (6)

Vijay Raj - Chennai,இந்தியா
28 ஆக, 2017 - 16:00 Report Abuse
Vijay Raj ஊ ஊ ஊ
Rate this:
Jaya Balan - Villupuram,இந்தியா
28 ஆக, 2017 - 15:50 Report Abuse
Jaya Balan விஜய் படத்துக்கு அதிகார்வப்பூர்வமாக படக்குழுவே அறிவித்தாலும் அதை உண்மை இல்லை என்பதுபோலவும், இதுவே அஜித் படத்துக்கு அதிகார்வப்பூர்வமாக யாருமே? அறிவிக்கவில்லை என்றாலும் அறிவிச்ச மாதரி புள்ளி விவரமா? பில்டப் பண்ணி எழுதறுதும் உங்களால் மட்டுமே முடியும்.
Rate this:
jegan - ,
29 ஆக, 2017 - 07:29Report Abuse
jeganரொம்ப சரி நண்பா,...
Rate this:
29 ஆக, 2017 - 08:30Report Abuse
SasiKumarநார்மலா ஒரு தியேட்டரில்1000 seat இருந்தால் டிக்கெட் விலை அரசு விதிப்படி 180 அனைத்தும் சேர்த்து 500×180=90,000 × 5காட்சி = 4,50,000 திருப்பூரில் 35 தியேட்டர் 4,50,000×35=1,57,50,000 ஒரு நாள் வசூல் 4நாட்களுக்கு 6,30,00,000 ×30மாவட்டம் =189,00,00,000 (189 ,கோடி) அரசு கணக்கு படி இதில் ரசிகர்கள் ஷோ இல்லை...
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
31 ஆக, 2017 - 13:08Report Abuse
Aarkayloosuthanamaana kanakku.......
Rate this:
Jaya Balan - Villupuram,இந்தியா
04 செப், 2017 - 14:25Report Abuse
Jaya Balanappadinaa puli padam tholvi padam illainu solringala sasikumar...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Karuppan
  • கருப்பன்
  • நடிகர் : விஜய் சேதுபதி
  • நடிகை : தன்யா ரவிச்சந்திரன்
  • இயக்குனர் :பன்னீர்செல்வம்
  Tamil New Film Theeran Adhigaram Ondru
  Tamil New Film Nadodi Kanavu
  • நாடோடி கனவு
  • நடிகர் : மகேந்திரன்
  • நடிகை : சுப்ரஜா
  • இயக்குனர் :வீரசெல்வா
  Tamil New Film Mersal
  • மெர்சல்
  • நடிகர் : விஜய்
  • நடிகை : காஜல் அகர்வால்
  • இயக்குனர் :அட்லீ

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in