ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் விஜயலட்சுமி நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம் அபியும் அனுவும். இதில் மலையாள நடிகர் டோவினோ தாமஸ், பியா பாஜ்பாய், ரோகினி சுஹாசினி, பிரபு, மனோபாலா, தீபா ராமானுஜம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர். தரனின் இசையில், அகிலனின் ஒளிப்பதிவில், உதயபானு மகேஸ்வரனின் கதை மற்றும் திரைக்கதையில் அபியும் அனுவும் உருவாகியுள்ளது. படத்தை ச ரி க ம நிறுவனத்தின் சினிமா பேனரான யாட்லி தயாரித்துள்ளது. படப்பிடிப்புகள் முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகிறது. படம் பற்றி இயக்குனர் விஜயலட்சுமி கூறியதாவது:
இது ஒரு புதுமையான, இது வரை சொல்லப்படாத கதை. இதே போல் பல இயக்குனர்கள் முன்பு கூறியிருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். அனால் இது அது போல் கிடையாது. இது எவ்வளவு புதுமையான கதை என்பதை இப்படம் ரிலீசாகம்பொழுது ரசிகர்கள் அறிவார்கள். மலையாள சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் டோவினோ தாமஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக கால் பாதிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக பியா பாஜ்பாய் நடித்துள்ளார்.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இது ஒரு வித்தியாசமான மற்றும் துணிச்சலான படமாக இருக்கும். முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காதலை இப்படத்தில் கையாண்டுள்ளோம். படத்தில் இருக்கும் அதிரடிகளை மேலும் உடைக்காமல், இது ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான திருப்பங்களுடன் இருக்கும் ஒரு உணர்வுப்பூரமான காதல் கதையாக இருக்கும் என கூறிக்கொள்ள விரும்புகிறேன். என்கிறார் விஜயலட்சுமி.