ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியா பயன்படுத்தியதால் 'நீங்க ஷட்அப் பண்ணுங்க' என்ற வார்த்தை மிகவும் பாப்புலரானது. ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் நடிக்கும் பலூன் படத்தில் 'நீங்க ஷட்அப் பண்ணுங்க' என்ற வார்த்தையை மையமாக வைத்து பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் இடம்பெற உள்ள 'நீங்க ஷட்அப் பண்ணுங்க' என்ற அந்த பாடலை அனிருத் பாடியுள்ளார். இதே பாடலை ஓவியாவை வைத்து பாட வைக்க எண்ணிய பலூன் பட இயக்குநர் ஓவியாவை அணுகியிருக்கிறார். தன்னால் பிரபலமான 'நீங்க ஷட்அப் பண்ணுங்க' என்ற வார்த்தையைக் கொண்டு பாடலை உருவாக்குவது பற்றி மகிழ்ச்சி தெரிவித்த ஓவியா, சொந்தக்குரலில் பாட மறுத்துவிட்டாராம்.
ஓவியாவின் மறுப்புக்குக் காரணம்.... பலூன் படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடிப்பதுதான் என்று சொல்லப்படுகிறது. சுந்தர்.சி இயக்கிய கலகலப்பு படத்தில் ஓவியாவும் அஞ்சலியும் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் ஈகோ மோதல் ஏற்பட்டதாக அப்போது செய்திகள் வெளியாகின. அந்த சம்பவத்தை ஓவியா இன்னும் மறக்கவில்லை. அதனால்தான் அஞ்சலி நடிக்கும் படத்தில் ஓவியா பாட மறுத்துவிட்டதாக சொல்கின்றனர் பலூன் படக்குழுவினர்.