ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்-நயன்தாரா நடித்துள்ள படம் வேலைக்காரன். இந்த படத்தை செப்டம்பர் 29-ந்தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில் மலையாள நடிகர் பகத்பாசிலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருப்பதால் வேலைக்காரனை கேரளாவிலும் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள்.
மேலும், அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் டீசர் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் ஆகஸ்ட் 28-ந்தேதி அன்று ஒரு சிங்கிள் ட்ராக் பாடல் வெளியிடுகிறார்கள். அது ஒரு குத்துப்பாடல் என்றும் அனிருத் டுவிட் செய்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், மோகன்ராஜாவும் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளனர்.