ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சித்தார்த் நாயகனாக நடித்துள்ள சைத்தான் கா பச்சா, நயன்தாரா, அதர்வா நடித்துள்ள இமைக்கா நொடிகள் ஆகிய படங்களில் நடித்து தமிழுக்கு அறிமுகமாக இருக்கிறார் ராக்ஷி கண்ணா. தமிழுக்குத்தான் இவர் புதுமுகம். ஆனால் தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். அதோடு மலையாளத்தில் மோகன்லாலின் வில்லன் படத்திலும் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், ராக்ஷி, ஓரளவு உடல் வெயிட் போட்டு காணப்பட்டதால் அவரை தெலுங்கு பட உலகில் பப்ளி கேர்ள் என்று தான் அழைத்து வருகிறார்கள். மேலும், தற்போது ஜூனியர் என்டிஆரின் ஜெய்லவகுசா, ரவிதேஜாவின் ஒரு படம் உள்பட சில முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் ராக்ஷி கண்ணா. ஆனால் இந்த படங்களில் நடிப்பதற்கு முன்பு, அவரை கண்டிப்பாக வெயிட் குறைக்க வேண்டும் என்று கண்டிசன் போட்டு விட்டார்களாம். அதனால் சில மாதங்களாக டயட்ஸ், உடற்பயிற்சி மூலம் தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக்கியுள்ளார்.