ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜெய், அஞ்சலி நடித்துள்ள பலூன் படத்தில் இன்னொரு நாயகியாக நடித்துள்ளார் ஜனனி அய்யர். படத்தில் ஜெய்யின் பிளாஷ்பேக் காதலியாக நடித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
என்னுடைய கதாபாத்திரம் 1980-களின் பின்னணியில், கொடைக்கானலில் வாழும் ஒரு பெண்ணை பற்றியது. மிகவும் கட்டுகோப்பான குடும்பத்தைச் சேர்ந்த பெண். அதையும் மீறி ஜெய்யை காதலிக்கும் பெண்ணாக நடிக்கிறேன். இந்த கதாபாத்திரம் "மூன்றாம் பிறை" ஸ்ரீதேவியின் அப்பாவித்தனமான நடிப்பை சார்ந்து இருக்க வேண்டும் என்று இயக்குனர் விரும்பினார். காலம் தாண்டியும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும் அந்த நடிப்புக்கு ஈடு, இணை ஏது.
ஆயினும் நான் நடிக்கும் போது, ஸ்ரீதேவியின் நடிப்பை பார்த்து அந்த உந்துதல் என்னை சிறப்பாக நடிக்க வைத்தது எனலாம். அவரை காப்பி அடித்து நடித்தேன் என்றும் சொல்லலாம். ரசிகர்கள் என் கதாபாத்திரத்தை நிச்சயம் ரசிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன் என்கிறார் ஜனனி ஐயர்.