ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
நடிகர் கரணுக்கு வீராப்பு ஜாஸ்தி என கோலிவுட்டில் எப்போதுமே ஒரு டாக் இருக்கும். அதே கரணைப் பற்றி இப்போது வேறு மாதிரி பேசுகிறதாம் திரையுலகம். வில்லன் நடிகராக இனி நடிப்பதில்லை என்று முடிவெடுத்த பிறகு எந்த சூழ்நிலையிலும் அதை விட்டுக் கொடுக்காமல் ஸ்ட்ரிக்டாக இருந்திருக்கிறார் கரண்.
அதே மாதிரி, முன்னணி ஹீரோக்கள் பலர் விளம்பரங்களில் தலை காட்டி துட்டு பார்த்து வந்தாலும் கூட , எனக்கு விளம்பரப் படங்களில் நடிக்க விருப்பமில்லை என முறுக்கிக் கொண்டே இருந்தார். அப்படிப்பட்ட கரணை தேடி வந்தது பாலிவுட் நடிகை கரீனாவுடன் நடிக்கும் வாய்ப்பு, அவரது முறுக்கு, வீராப்பு, எக்சட்டிரா, எக்சட்டிரா எல்லாத்தையும் ஓரங்கட்டியது. ஆஃபரை உடனே லபக்கிக் கொண்டு, ஓகே சொல்லிவிட்டாராம்.
அப்புறம் என்ன அந்த அட்வர்டைஸ்மென்ட் இப்போது டி.வி.,களில் ஓடிக் கொண்டிருக்கிறது. புடிச்சாலும் புளியங் கொம்பாத்தான் புடிப்பேன், விளம்பரத்தில் நடிச்சாலும் இப்படி மாஸ் ஹீரோயினுடன் தான் நடிப்பேன் எனும் கரணை பார்த்து அசந்து போயிருக்கிறது கோலிவுட்.