ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தலைப்பு, “பெண்களின் தூக்கத்தைக் கெடுக்கும் அஜித்' என்று தானே இருக்க வேண்டும் என யோசிக்க வேண்டாம். 20 வருடங்களுக்கு முன்னால் வேண்டுமானால் அப்படி சொல்லியிருக்கலாம். இப்போது அப்படி சொன்னால் அஜித்துக்கே அது பிடிக்காது. அதனால்தானோ என்னவோ, தொடர்ந்து 'சால்ட் அன்ட் பெப்பர்' தோற்றத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தனது ரசிகர்கள் நன்றாக இருக்க வேண்டும், அவர்களது குடும்பங்களை கவனிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் பல வருடங்களுக்கு முன்பே எந்த ஒரு நடிகரும் செய்யாத, ரசிகர் மன்றங்களைக் கலைத்த விஷயத்தைச் செய்தார் அஜித். அப்படியிருந்தும் அவர் மீது தீராத அன்பு கொண்டு இன்னமும் அஜித்தை நேசித்து வருகிறார்கள் எண்ணற்ற ரசிகர்கள்.
ஆனால், அஜித் படங்கள் பற்றிய முக்கிய வெளியீடுகளான முதல் பார்வை, டிசர், டிரைலர் ஆகியவை கடந்த சில படங்களாக நள்ளிரவில் மட்டுமே வெளியாகிறது. அஜித் மீது அபிமானம் கொண்ட ரசிகர்கள் அஜித்தின் படங்கள் பெரிய சாதனை புரிய வேண்டும் என்பதற்காக அவர்களது தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு அந்த வீடியோக்களைப் பார்த்தும், லைக் செய்தும் சாதனையைப் புரிய வைக்கிறார்கள்.
இன்று வெளியான 'விவேகம்' டிரைலர் கூட வழக்கம் போல நள்ளிரவில் தான் வெளியானது. அவரது ரசிகர்கள் தூங்காமல் நிமிடத்திற்கு நிமிடம் புதிய சாதனை நிகழக் காரணமாக இருந்தார்கள்.
கல்லூரியில் படிப்பவர்களும், வேலைக்குச் செல்பவர்கள் பலரும் அதில் இருக்கிறார்கள். இந்த 12 மணி நேரத்திற்குள் 20 லட்சத்தைக் கடந்த பார்வைகள், 3 லட்சம் லைக்குகள் என்றால் எத்தனை லட்சம் பேர் இன்று நள்ளிரவில் அவர்களது தூக்கத்தை இதற்காக விட்டுக் கொடுத்திருப்பார்கள்.
ரசிகர்கள் மீது அதிக அக்கறை வைத்திருக்கும் அஜித், இனியும் இந்த நள்ளிரவு வெளியீடுகளைச் செய்ய வேண்டாம் என அவரது தயாரிப்பாளர்களிடமும், இயக்குனர்களிடமும் கேட்டுக் கொள்வாரா...?.