Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திலீப்புடன் எந்த பிரச்னையுமில்லை: லட்சுமி ராமகிருஷ்ணன்

15 ஆக, 2017 - 16:28 IST
எழுத்தின் அளவு:
No-problem-with-Dileep-says-Lakshmi-Ramakrishnan

மலையாள நடிகர் திலீப் நடிகை விவகாரத்தில் சிக்கி சிறைக்கு சென்றாலும் சென்றார், மற்ற சில பிரபலங்களின் பிரச்சனைகளுடன் அவரை தொடர்புபடுத்தி தினமும் ஏதாவது ஒரு பகீர் செய்தி வெளியாகி கொண்டு தான் இருக்கிறது. அந்த பட்டியலில் இப்போது நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனையும் கோர்த்துவிட்டுள்ளார்கள் சோஷியல் மீடியாவாசிகள். திலீப்புக்கும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும் என்னய்யா சம்பந்தம் என நீங்கள் கேட்பது புரிகிறது.. மலையாளத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடித்த முதல் படமான 'சக்கர முத்து' படத்தில் திலீப் தான் ஹீரோவாக நடித்தார் என்பது கவனிக்கத்தக்கது.

இப்போது கிளம்பியுள்ள சர்ச்சை என்னவென்றால், சில வருடங்களுக்கு முன் இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில் திலீப் நடித்த 'கொல்கத்தா நியூஸ்' படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடிப்பதாக இருந்ததது. ஆனால் சில காரணங்களால் அந்தப்படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அப்படி நீக்கப்பட்டதன் பின்னணியில் திலீப் தான் காரணம் என லட்சுமி ராமகிருஷ்ணன் சொன்னதாக இப்போது புதிய பூதத்தை கிளப்பி விட்டுள்ளார்கள். இதனைக்கண்டு கொதித்துப்போன லட்சுமி ராமகிருஷ்ணன், அந்தமாதிரி நிகழ்வு எதுவும் நடக்கவில்லை எனவும் திலீப்பை பற்றி அப்படி எதுவும் தான் கூறவில்லை எனவும் காட்டமாக கூறியுள்ளார்.

மேலும் நடந்தது பற்றி அவர் கூறுகையில், “நான் ஒரு பேட்டியின்போது, கொல்கத்தா நியூஸ் படத்தில் இருந்து என்னை ராசியில்லாத நடிகை என நீக்கிவிட்டார்கள். ஆனால் இதோ இப்போது என்னுடைய ராசி, நல்ல ராசிதான் என நிரூபணமாகவில்லையா என கூறியிருந்தேன். இதைப்படித்துவிட்டு திலீப் கூட எனக்கு போன் செய்து, சேச்சி உங்களை 'கொல்கத்தா நியூஸ்' படத்தில் இருந்து நீக்கியதற்கு நான் காரணமில்லை என்று கூறினார். ஆக, அந்த விஷயம் அப்போதே முடிந்துவிட்டது.

இப்போது தேவையில்லாமல், நான் சொல்லாததை சொன்னதாக திரித்து கூறுவது தவறு. நீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்கு ஆளான ஒருவர் பற்றி தேவையில்லாமல் பேசுவது தவறு என்கிற அடிப்படை அறிவு கூடவா எனக்கு இருக்காது. திலீப்பை பொறுத்தவரை அவருடன் நான் நடிக்கும்போது மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டார். அவ்வளவுதான்” என விளக்கமளித்துள்ளாராம் லட்சுமி ராமகிருஷ்ணன்.

Advertisement
'அறம் செய்து பழகு' தலைப்பு மாற்றம்'அறம் செய்து பழகு' தலைப்பு மாற்றம் நிவின்பாலி படத்தில் முக்கிய வேடத்தில் சரத்குமார் நிவின்பாலி படத்தில் முக்கிய ...


வாசகர் கருத்து (3)

singaivendan - Singapore,சிங்கப்பூர்
17 ஆக, 2017 - 09:26 Report Abuse
singaivendan திலீப்பை பொறுத்தவரை...அவருடன் நான் நடிக்கும் பொது அவர் மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டார்...கண்ணியத்துக்கும் திலீபுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது இந்த உலகம் அறிந்ததே...இருந்தாலும் இப்ப உங்க கிட்ட நாங்க யாராவது ஏதாவது கேட்டமா...ஏன் வஞ்சிரம் மீன் வழிய வந்து வலைல மாட்டுது? எங்கப்பன் குதிருக்குள் இல்லை...நீங்க சொன்னா நாங்க நம்பனும் அப்டியா...சேச்சி, அல்லது அட ச்சே சீய் சொல்லவா ?
Rate this:
appaavi - aandipatti,இந்தியா
15 ஆக, 2017 - 23:52 Report Abuse
appaavi நல்லவேளை வேற குண்டை போடவில்லை....
Rate this:
Dol Tappi Maa - NRI,இந்தியா
15 ஆக, 2017 - 21:50 Report Abuse
Dol Tappi Maa கேரளவாவில் இருந்து வந்து நீயெல்லாம் நியாயம் பேச வந்துட்ட
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Gorilla
  • கொரில்லா
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : ஷாலினி பாண்டே
  • இயக்குனர் :டான் சாண்டி
  Tamil New Film Imaikkaa nodigal
  Tamil New Film ennai nokki paayum thotta
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in