அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விவேகம் படம் ஆகஸ்ட் மாதம் 24-ந் தேதி திரைக்கு வருகிறது. அன்றைய தினத்தில் வேறு எந்த நடிகர்களின் படங்களும் திரைக்கு வரவில்லை. அதனால் பெரும்பாலான தியேட்டர்களில் விவேகம் வெளியாகிறது. மேலும், இந்த படத்தின் பர்ஸ்ட்லுக், டீசர், பாடல்கள் என ஒவ்வொன்றாக வெளியாகி பரபரப்பு கூட்டின.
முக்கியமாக விஜய்யின் மெர்சல் படத்தின் பர்ஸ்ட்லுக், பாடல்கள் என வெளியாகிக்கொண்டிருப்பதால், விஜய் ரசிகர்களைப்போலவே அஜித் ரசிகர்கள் விவேகம் படத்தின் டீசர், பாடல்களையும் போட்டி போட்டு டிரென்டிங் செய்து கொண்டிக்கிறார்கள். மேலும், வருகிற 24-ந்தேதி படம் திரைக்கு வருவது உறுதியாகி விட்டதால், டிரைலரை வெளியிடாமல் ஏமாற்றி விடுவார்களோ என்று அஜித் ரசிகர்கள் நினைக்கிறார்கள்.
இந்நிலையில், தற்போது விவேகம் படத்தின் எடிட்டர் ரூபன், விவேகம் படத்தின் டிரைலர் ரெடியாகி விட்டது. டிரைலர் எப்போது ரிலீஸ் என்பதை டைரக்டர் சிவா அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்களை செம உற்சாகப்படுத்தியிருக்கிறது.