ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
கடந்த பிப்ரவரி மாதம் தெலுங்கில் வெளிவந்த படம் ஓம் நமோ வெங்கடேசாய. இதில் நாகார்ஜுனா, அனுஷ்கா, பிரயக்யா, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கே.ராகவேந்திரராவ் இயக்கி இருந்தார். மரகதமணி இசை அமைத்திருந்தார். கோபால் ரெட்டி ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இந்தப்படம் திருப்பதி பெருமாளின் மகிமையை கூறும் சமூக மற்றும் பேண்டசி படம். ஹாத்திராம் பாபாவின் கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. மகாபாரத தொடரில் கிருஷ்ணராக நடித்து புகழ்பெற்ற சௌரப்ஜெயின் வெங்கடேச பெருமாள் வேடம் ஏற்று நடித்துள்ளார்.
பகவானுக்கும், பக்தனுக்கும் உள்ள உறவு, திருமலை உருவான விதம், ஆனந்த நிலையம் என பெயர் வரக்காரணம், வேங்கடம் என்ற சொல்லுக்கு பொருள் விளக்கம், ராமா என்பவர் ஹாத்திராம் பாபாவாக மாறியது எப்படி, பாலாஜி என்று பெயர் வரக்காரணம், திருமலையில் முதலில் யாரை வணங்குவது என பக்தர்கள் மனதில் எழும் பல சந்தேக வினாக்களுக்கு ஏற்ற விளக்கங்களை இப்படத்தில் தெளிவான படக்காட்சிகளாக அமைத்து தெளிவுப்படுத்தியுள்ளனர்.
இந்தப் படம் பிரமாண்ட நாயகன் என்ற பெயரில் தமிழில் டப் ஆகிறது. இதன் தமிழ் வசனம் மற்றும் பாடல்களை டி.எஸ்.பாலன் எழுதியுள்ளார். பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் ஜோஷிகா பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் துரைமுருகனும், நாகராஜனும் வெளியிடுகிறார்கள்.