ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா போன்ற படங்களில் ஹீரோக்களின் நண்பராக நடித்த சௌந்தரராஜா, “எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தங்க ரதம், ஒரு கனவு போல, கள்ளன், சிலுக்குவார்பட்டி சிங்கம், திருட்டுப்பயலே 2, படங்களில் நடித்து வருகிறார்.
சவுந்தர்ராஜா மரம் நடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். தனது பிறந்த நாளையொட்டி படப்பை அருகில் உள்ள உமையாள்பரணச்சேரி கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளியில் 25 வளர்ந்த பெரிய மரக்கன்றுகளை மாணவர்களுடன் சேர்ந்து நட்டு, அதை வளர்க்க ஏற்பாடு செய்து தன் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார். இதுகுறித்து சவுந்தர்ராஜா கூறியதாவது:
சின்ன வயசுல மாமன்னன் அசோகன் மரங்களை நட்டார், குளங்களை வெட்டினார்னு பாடம் படிச்சிருப்போம். அதுக்கு அப்புறம் நம்ம, ஒவ்வொருத்தரும் தனி மனிதனாக எவ்வளவு மரங்களை நட்டோம், எவ்வளவு குளங்களை வெட்ட காரணமாக இருந்தோம்னு கேட்டா, அது பெரிய கேள்விக்குறி தான். என் வாழ்நாளில் நிறைய மரங்களை நடணும்னு பெரிய கனவு எனக்கு. நடுறது மட்டுமில்லை, அதை முறையா பராமரிச்சு வளர்க்கணும். என் வாழ்நாளில் 10 இலட்சம் மரங்கள் நடணும்கிறது என் கனவு. என்னோட பிறந்தநாளில் 120 மாணவர்களுடன் 25 மரக்கன்றுகள் நட்டதை என் வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வா நினைக்கிறேன். அந்த மாணவர்கள் படிக்கிற பள்ளியிலேயே அந்த மரங்களை நட்டது இன்னும் மகிழ்ச்சியான விசயம். என்கிறார் சவுந்தர்ராஜா.