Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'விஐபி 2, பொதுவாக எம்மனசு தங்கம், தரமணி' - முதல் நாள் நிலவரம் என்ன ?

12 ஆக, 2017 - 11:47 IST
எழுத்தின் அளவு:
VIP2,-Tharamani,-podhuvaga-en-manasu-thangam-which-is-good-collection.?

2017ம் வருடத்தில் மிகப் பெரும் போட்டியாகப் பெரிய படங்களும் இல்லாமல், மற்ற சிறிய படங்களையும் வெளிவர விடாமல் கடந்து போன ஒரு நாள் தான் நேற்றைய தினமான ஆகஸ்ட் 11. 'வேலையில்லா பட்டதாரி 2, பொதுவாக எம்மனசு தங்கம், தரமணி' ஆகிய மூன்றே மூன்று நேரடித் தமிழ்ப் படங்கள்தான் நேற்று வெளியாகின. இதற்கு முன் வாரங்களில் வெளியான படங்கள் ஒரு சில தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கின்றன. மற்ற பெருவாரியான தியேட்டர்களை நேற்று வெளியான படங்கள் போட்டி போட்டு கைப்பற்றின.

மூன்று படங்ளுமே ஒன்றுக்கொன்று விளம்பரம் செய்வதில் சளைத்தவரில்லை என பல விதங்களில் படத்தை பிரமோஷன் செய்து வருகிறார்கள். ஆனால், மூன்று படங்களின் முதல் நாள் நிலவரம் கலவரமாக இல்லை என்றாலும் கலெக்ஷன் ஆகவேதான் இருக்கிறது. அது இன்றுடன் சேர்ந்த அடுத்த நான்கு விடுமறை நாட்களிலும் தொடரவே வாய்ப்புகள் அதிகம்.

'விஐபி 2' படத்தை சட்டென்று முடித்துவிட்டார்கள் என்றும், 'பொதுவாக எம்மனசு தங்கம்' படத்தில் நகைச்சுவையே இல்லை என்றும், 'தரமணி' படம் தரமானதாக இருந்தாலும் மாநகரங்களைத் தாண்டி ஓடுமா என்றும் கமெண்ட்டுகள் எழுந்துள்ளது. ஆனாலும், இந்த கமெண்ட்டுகள் படங்களை அதிகம் பாதிக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.

பெரிய தயாரிப்பாளர்கள் கிடைத்தும் கதை சொல்வதில் அனைத்து ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் அளவிற்கு சம்பந்தப்பட்ட இயக்குனர்கள் கதை அமைத்திருக்கலாமே என்ற பொதுவான கேள்விதான் எழுகிறது. குறைகள் இல்லாத படங்கள் எப்போது வரும் என்று இன்னும் எத்தனை வருடங்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கப் போகிறோம்.

Advertisement
ஓவியாவின் 'இது என் காதல் கதை'ஓவியாவின் 'இது என் காதல் கதை' மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் நயன்தாரா? மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ...


வாசகர் கருத்து (4)

Abdul Rahman - Madurai,இந்தியா
12 ஆக, 2017 - 20:52 Report Abuse
Abdul Rahman அரை வேக்காட்டுத்தனம்.
Rate this:
Abdul Rahman - Madurai,இந்தியா
12 ஆக, 2017 - 20:48 Report Abuse
Abdul Rahman VIP 2 படம் பார்க்க சென்றிருந்தோம். 30 நிமிடத்திற்கு மேல் சீட்டில் உக்கார முடியல. டோடல் வேஸ்ட். நண்பர்கள் எல்லோரும் வீட்டுக்கு வந்துவிட்டோம்.
Rate this:
Natarajan Ramanathan - chennai,இந்தியா
12 ஆக, 2017 - 17:13 Report Abuse
Natarajan Ramanathan vip 2 மகா கேவலமாக இருக்கிறது. (நான் ஓசியில்தான் பார்த்தேன்)
Rate this:
gkrishna - chennai,இந்தியா
12 ஆக, 2017 - 13:17 Report Abuse
gkrishna நண்பர்களே தயவு செய்து vip 2 செல்ல வேண்டாம் என்று சிரம் தாழ்த்தி வேண்டி கொள்கிறேன். எத்தனையோ தகுதி உள்ள உதவி இயக்குனர்கள் எல்லாம் முட்டி மோதி கொண்டு இருக்கும் போது ரஜினியின் மகள் மற்றும் தனுஷ் அவர்கள் மனைவியின் தங்கை என்ற ஒரு தகுதியை கொண்டு திரைப்படம் இயக்குவது. தமிழ் சினிமாவில் மட்டுமே இது சாத்தியம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Velaikkaran
  • வேலைக்காரன்
  • நடிகர் : சிவகார்த்திகேயன்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :ஜெயம் ராஜா
  Tamil New Film thirupathisamy kudumbam
  Tamil New Film oru kanavu pola
  • ஒரு கனவு போல
  • நடிகர் : ராமகிருஷ்ணன் ,
  • நடிகை : அமலா
  • இயக்குனர் :வி.சி விஜய்சங்கர்
  Tamil New Film maayavan
  • மாயவன்
  • நடிகர் : சந்தீப் கிஷன்
  • நடிகை : லாவண்யா திரிபாதி
  • இயக்குனர் :சி.வி. குமார்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in