ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
2014-ம் ஆண்டில், தனுஷ் நடிப்பில், வேல்ராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் விஐபி எனப்படும் வேலையில்லா பட்டதாரி. இதன் தொடர்ச்சியாக இப்போது வேலையில்லா பட்டதாரி-2 வெளியாகியிருக்கிறது. சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில் தனுஷ், அமலா பால், கஜோல் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
முதல்பாகத்தில் பட்டதாரி இன்ஜினியர்களின் வாழ்க்கையை அழகாக படமாக்கியிருந்தனர். அதற்கு அனிருத்தின் பின்னணி இசையும், பாடல்களும் பக்காவாய் அமைந்திருந்தன. ஆனால் விஐபி-2 வில் அது மொத்தமாக மிஸ்ஸிங். விஐபி-2 டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியான போதே அனிருத் மிஸ்ஸிங் என ரசிகர்கள் வருத்தப்பட்டார்கள். இப்போது படம் பார்க்கும்போது அதே உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
"வி.ஜ.பி......", "என் பச்சை மரம் பிச்சுக்கிச் சே...", "இறைவனாய் தந்த இறைவியே..." உள்ளிட்ட பாடல்கள் இசை, பின்னணி இசையைக் காட்டிலும் ஆங்காங்கே ஒலிக்கும் அனிருத்தின் விஐபி தீம்களே ரசிகர்களை கவருகின்றன.