ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
அஜித்தின் விவேகம் படம் திரைக்கு வர தயாராகி விட்ட நிலையில், அவரது ரசிகர்கள் விவேகம் அஜித் கெட்டப்பில் அவருக்கு சிலைகள் செய்து வருகின்றனர். அப்படி சமீபத்தில் அஜித்தின் சிலையை திறந்து வைக்க நடிகர் இமான் அண்ணாச்சியை அழைத்திருக்கிறார்கள். அஜித் சிலை என்றதும் அவரும் சந்தோசமாக போய் திறந்து வைத்திருக்கிறார்.
அதையடுத்து, மீடியாக்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அப்போது இதுவரை நான் அஜித்துடன் நடித்ததில்லை. என்றாலும் ரசிகர்கள் அழைத்ததால் அஜித் சிலையை திறந்து வைக்க வந்தேன். அடுத்து அஜித் - சிவா இணையும் படம் அல்லது வேறு படத்தில் அஜித்துடன் நடிக்க வாய்ப்பிருக்கிறது என்று பொதுவாக கூறியிருக்கிறார்.
ஆனால் அதையடுத்து, விவேகம் படத்தை அடுத்து மீண்டும் அஜித் - சிவா கூட்டணி இணைவதாக இமான் அண்ணாச்சி கூறியது போன்ற செய்திகள் பரவ, இப்போது நான் அப்படி சொல்லவில்லை என்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இப்படியொரு செய்தியை நான் வெளியிட்டதாக அஜித்தோ அல்லது டைரக்டர் சிவாவோ கேள்விப்பட்டால் உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டிருப்பதாக என்னை தவறாக நினைப்பார்கள். அஜித் சிலையை திறந்து வைக்க சந்தோசமா சென்ற நான், இப்போது இப்படியொரு சிக்கலில் சிக்கியிருக்கிறேன் என்கிறார் இமான் அண்ணாச்சி.