பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
தனுஷிடம், இப்போது ரொம்பவே முதிர்ச்சி தெரிகிறது. ஏதாவது ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி பேசும் முன், யோசித்துத் தான் பேசுகிறார். வேலையில்லா பட்டதாரி - 2 படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி, சமீபத்தில் மும்பையில் நடந்தது. இதில் பங்கேற்ற தனுஷ், தன் திரை அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். 'சினிமாவில் போட்டி, அவசியமில்லை என்றே கருதுகிறேன். முதலில், இதை தொழிலாக கருத வேண்டும். இதில், நாம் நன்றாக வேலை செய்தால், கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். எனவே, மற்றவர்களை போட்டியாக நினைப்பது, அவர்களை பார்த்து, பொறாமைப்படுவது போன்ற விஷயம் எல்லாம் தேவை இல்லாதது' என்றார், தனுஷ். இந்த படம், ஹிந்தி மொழியிலும் வெளியாவதால், வட மாநிலங்களின் முக்கிய நகரங்களிலும், படத்தை விளம்பரப்படுத்துவதற்கான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது, படக்குழு.