ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'வசந்தகால பறவை', 'சூரியன்', 'திருமூர்த்தி', 'ஐ லவ் இந்தியா', 'கல்லூரி வாசல்' ஆகிய படங்களை இயக்கியவர் பவித்ரன். அதன் பிறகு சரத்குமாரை வைத்து புகழ் என்ற படத்தை ஆரம்பித்தார். ஆனால் அந்தப்படமே டிராப்பானது.
இந்நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு 'தாராவி' என்ற படத்தை இவர் இப்போது இயக்கி வருகிறார். மும்பையில் தாராவி பகுதியில் கேபிள் டி.வி.உரிமையாளரிடம் வேலை பார்க்கும் ஐந்து இளைஞர்கள் பற்றிய கதை அம்சம் கொண்ட படம் இது.
'தாராவி' படத்தில் சதீஷ்பாலா, மும்பை கிருஷ்ணா, பிரபு சதீஷ், லிங்கம் சிவா, லியோ ஆகிய புதுமுகங்களுடன் சைமன் சோமு, மாறன் நாயகம், கதிர், ஷ்யாம், லதா ஆகியோரும் நடிக்கின்றனர். கதாநாயகியாக சுனுலட்சுமி நடிக்கிறார்.
நயன்தாரா தற்போது நடித்து வரும் 'அறம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்தான் சுனுலட்சுமி. பல விளம்பர படங்களுக்கு இசை அமைத்துள்ள அபய் பவித்ரன் இந்த படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார்.
இவர் இயக்குநர் பவித்ரனின் மகன். மகனின் இசைத்திறைமையை புரிந்து கொண்டு தன்னுடைய இயக்கத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்துகிறார். மும்பை தாராவி பகுதியிலும், கேரளாவில் உள்ள சாலக்குடியிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவை மணிகண்டன் கவனிக்கிறர்.