ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு தமிழில் அறிமுகமாகும் முதல் படம்ன 'ஸ்பைடர்' படத்தின் டீசர் இன்று மகேஷ் பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு காலை வெளியிடப்பட்டது. முருகதாஸ் படம் என்றாலே ஆக்ஷன் கலந்த படமாக இருக்கும் என்பது ரசிகர்களுக்குத் தெரியும். இந்தப் படத்தில் அடுத்த கட்டத்திற்கு அவர் போயிருப்பார் என்பதை படத்தின் டீசர் சொல்கிறது. விறுவிறுப்பான, அதிரடியான டீசராக இல்லை என்றாலும் படத்தில் ஏதோ ஒரு பெரிய விஷயத்தைக் கையாண்டிருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது.
முகமூடி ஒன்றை அணிந்து கொண்டு வில்லன் (?) எஸ்.ஜே. சூர்யா பேசும் “ஜனத் தொகைய கட்டுப்பாட்டுல வச்சிக்கிறதுல கவர்ன்மென்ட், பூகம்பம், சுனாமி அதோட எனக்கும் கொஞ்சம் பங்கிருக்கு,” என்ற வசனத்திலிருந்து படத்தின் கதையைக் கொஞ்சம் யூகிக்க முடிகிறது.
ஆங்கிலப் படங்களில் வருவது போல ஒரு பெரு நகரத்தில் தொடர்ந்து நடக்கும் சில விபரீத சம்பவங்களுக்கு வில்லனான எஸ்.ஜே.சூர்யா காரணமாக இருக்கிறார். அவற்றை உளவுத் துறை அதிகாரியான மகேஷ் பாபு எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதையாக இருக்க வாய்ப்புகள் அதிகம். ஸ்பைடர் மேன், பேட் மேன், சூப்பர் மேன் வகைப் படங்களின் தாக்கம் டீசரில் இருக்கிறது.
மகேஷ் பாபுவின் தமிழ் உச்சரிப்பு உதட்டசைவுடன் சரியாக இருக்கிறது, எனவே படம் கண்டிப்பாக தமிழிலும் எடுக்கப்பட்டிருக்கிறது என நம்பலாம். ஹாரிஸ் ஜெயராஜின் டீசர் இசை அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லை. ஒரு பெரிய பாறை உருண்டு வரும் காட்சியும் கிராபிக்ஸ் என்று அப்படியே தெரிகிறது. 'எந்திரன், பாகுபலி 2' வந்த பிறகு இப்படி ஒரு அமெச்சூர் கிராபிக்ஸ் காட்சி ஏன் இயக்குனர் முருகதாஸ் அவர்களே ?.
தமிழை விட தெலுங்கில் டீசரின் பார்வைகள் எண்ணிக்கை ஏறிக் கொண்டே போகிறது. தமிழில் எப்படியோ, தெலுங்கில் சூப்பர் ஹிட்டாகும் என்று இப்போதே ஜோசியம் சொல்லிவிடலாம்.