ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில், தனுஷ், கஜோல், அமலா பால் மற்றும் பலர் நடிக்கும் 'வேலையில்லா பட்டதாரி 2' படம் வரும் 11ம் தேதி வெளியாகிறது. அன்றைய தினமே இப்படத்தின் தெலுங்கு, ஹிந்தி டப்பிங் படங்களும் வெளியாகும் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால், தற்போது தெலுங்கு, ஹிந்தி வெளியீட்டை ஒரு வாரத்திற்குத் தள்ளி வைத்துவிட்டார்கள். இது பற்றிய அறிவிப்பை தனுஷே வெளியிட்டுள்ளார்.
தெலுங்கில் வரும் 11ம் தேதியன்று ராணா டகுபட்டி, காஜல் அகர்வால், கேத்தரின் தெரேசா மற்றும் பலர் நடிக்கும் 'நேனே ராஜு நேநே மந்திரி' படமும், நிதின், மேகா ஆகாஷ் மற்றும் பலர் நடிக்கும் 'லை' படமும், பெல்லம்கொண்டா சீனிவாஸ், ரகுல் ப்ரீதி சிங் மற்றும் பலர் நடிக்கும் 'ஜெய ஜானகி நாயகா' படமும் வெளிவர உள்ளன. இந்தப் படங்களுக்குள் போட்டி வேண்டாம் என மூன்று தயாரிப்பாளர்களையும் வினியோகஸ்தர்கள் கேட்டுக் கொண்டார்கள். ஆனால், யாருமே விட்டுக் கொடுப்பதாக இல்லை. அதனால், அன்றைய தினம் அந்த மூன்று நேரடித் தெலுங்குப் படங்களுக்குள் தியேட்டர்களைப் பிடிப்பதில் கடும் போட்டி இருக்கிறது.
அதனால், தனுஷ் நடித்துள்ள 'வேலையில்லா பட்டதாரி 2' படத்திற்குத் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் முதல் பாகம் 'ரகுவரன் பி.இ' என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்றது. அதனால், இரண்டாம் பாகத்தையும் வெற்றிப் படமாக்க படத்தின் வெளியீட்டைத் தெலுங்கில் ஒரு வாரம் தள்ளி வைத்துவிட்டனர். ஹிந்தியில் ஆகஸ்ட் 11ம் தேதி அக்ஷய் குமார் நடித்துள்ள 'டாய்லெட் - ஏக் பிரேம் கதா' படம் வெளிவருவதால் அங்கும் வெளியீட்டை ஒரு வாரம் தள்ளி வைத்துள்ளனர். இருந்தாலும் தமிழில் உலகம் முழுவதும் சுமார் 1000 தியேட்டர்களுக்கு மேல் வெளியிட உள்ளார்கள்.