ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஒரு படத்திற்கு அதன் வெளியீட்டிற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பு இருந்தால் அந்தப் படத்தைப் பார்த்து மற்ற படங்கள் ஒதுங்கி விடுவது வழக்கம். எல்லா படத்திற்கும் அப்படி ஒரு 'ஹைப்' கிடைக்காது. ரஜினிகாந்த் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'கபாலி' படத்திற்கு அப்படி ஒரு வரவேற்பு வெளியீட்டிற்கு முன்பு கிடைத்தது. படம் வெளிவந்த ஓரிரு வாரங்களுக்கும் அது தொடர்ந்தது.
அதற்குப் பிறகு அப்படி ஒரு 'ஹைப்' அஜித் நடித்து இந்த மாதம் வெளிவர உள்ள 'விவேகம்' படத்திற்குக் கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் முதல் பார்வையில் ஆரம்பமான பரபரப்பு இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. டீசர், சிங்கிள் பாடல்கள் என தொடர்ந்தது, இன்று இசை வெளியீடு வரையிலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படம் வெளிவர இன்னும் 17 நாட்கள் உள்ள நிலையில் படத்திற்கு டிரைலரை வெளியிடுவார்களா என அஜித் ரசிகர்களிடம் எதிர்பாப்பு ஏற்பட்டுள்ளது. 'வேதாளம்' படத்திற்கு டீசர் மட்டுமே வெளிவந்தது, டிரைலர் வரவேயில்லை. அதே போல 'விவேகம்' படத்திற்கு டிரைலர் வராமல் போய்விடுமோ என்ற வருத்தத்தில் இருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். டிரைலர் வந்தால் விஜய்யின் 'தெறி, பைரவா' டிரைலர்களின் சாதனைகளை முறியடிக்கக் காத்திருக்கிறார்கள்.
ஆகஸ்ட் 24ம் தேதி 'விவேகம்' வருவதால் அன்றைய தினம் வேறு யாரும் படத்தை வெளியிடத் தயாராக இல்லை. தமிழ்நாட்டில் உள்ள சுமார் 1000 தியேட்டர்களில் 700 தியேட்டர்களுக்கும் மேல் படத்தை வெளியிடப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். படம் வெற்றி என்றால் அதற்கடுத்து இரண்டு வாரங்களுக்கு வேறு புதுப் படங்கள் வெளிவர வாய்ப்பில்லை. இது இப்போதைய நிலைமை.