பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
சேவல் படத்தில் தமிழுக்கு வந்தவர் மும்பை நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து, தெனாவெட்டு, கச்சரி ஆரம்பம், துரோகி என பல படங்களில் நாயகியாக நடித்தவருக்கு பின்னர் சரியான படவாய்ப்புகள் இல்லை. அதனால் சில ஆண்டு இடைவெளிக்குப்பிறகு கேரக்டர் நடிகையாக பிரவேசித்தார். ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை-2 என பல படங்களில் நடித்த பூனம் பாஜ்வா, தற்போது தமிழ்ப்படங்களில் மட்டுமின்றி மலையாளத்தில் கேரக்டர் நடிகையாக என்ட்ரி கொடுத்துள்ளார்.
ஏற்கனவே மலையாளத்தில் சில படங்களில் நாயகியாகவும், கெஸ்ட் ரோல்களிலும் நடித்துள்ள பூனம் பாஜ்வா தற்போது மாஸ்டர் பீஸ், மரியா உள்ளிட்ட சில படங்களில் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார். இந்த படங்களைத் தொடர்ந்து லேனா அலெக்சாண்டர் என்ற படத்தில் நடிக்கயிருக்கும் அவருக்கு, தமிழ் சினிமாவை விட மலையாளத்தில் அடுத்தடுத்து படங்கள் கிடைப்பதற்கான சூழல் உருவாகியிருக்கிறதாம்.
அதனால், இதற்கு முன்பு மும்பையில் இருந்து வந்து சென்னையில் தங்கியபடி மலையாள படங்களில் நடித்து வந்தவர், இப்போது மும்பையில் இருந்து நேரடியாக கேரளாவுக்கே சென்று அங்கு முகாமிட்டபடி நடித்து வருகிறார்.