ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
எவ்வளவு பெரிய வசூல் சாதனையைப் புரிந்தவர்களாக இருந்தாலும் ஒரு படம் சரியாக அமையாமல் பிளாப் ஆகிவிட்டால் அவ்வளவுதான். அடுத்த வெற்றிக்காக அவர்கள் மிகவும் கடுமையாக உழைக்க வேண்டும். இது அனைத்து ஹீரோக்களுக்கும் கண்டிப்பாக நடக்கும் ஒரு விஷயம்தான்.
பாலிவுட்டின் மிகப் பெரும் ஹீரோக்களான சல்மான் கான், ஷாரூக் கான் ஆகியோருக்கு இந்த படு தோல்வி அடுத்தடுத்து வந்ததுதான் சோகத்திலும் சோகம். சல்மான் கான் நடித்து ஜுன் மாதம் வெளிவந்த டியூப் லைட் படம் சல்மான் கான் நடித்து வெளியான சமீபத் படங்களில் படுதோல்வியைச் சந்தித்த படமாக இருந்தது. படத்தின் முதல் நாளே படத்தின் தோல்வியை விமர்சகர்களும், ரசிர்களும் தீர்மானித்தார்கள். அது சரியாகவே அமைந்தது. பின்னர், வினியோகஸ்தர்களுக்கு சல்மான் கான் நஷ்ட ஈட்டுத் தொகையைக் கொடுத்தாகவும் சொன்னார்கள்.
இப்போது அப்படி ஒரு படுதோல்வி ஷாரூக்கானுக்கு வந்திருக்கிறது. ஷாரூக் கான், அனுஷ்கா சர்மா நடித்து நேற்று வெளிவந்த ஜப் ஹாரி மெட் சாஜல் படம் வெளியான முதல் நாளே இது ஒரு படுதோல்விப் படம் என்ற பெயரை வாங்கிவிட்டது. விமர்சகர்களும், ரசிகர்களும் படத்தைப் பார்த்து கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். பலர் படத்தின் பாதியிலேயே எழுந்து போய்விட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன.
பாகுபலி 2 ஹிந்தி டப்பிங் படம் பாலிவுட்டில் பெரும் வசூல் சாதனை செய்துள்ள நிலையில் அடுத்தடுத்து இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்கள் படுதோல்வியடைந்துள்ளது பாலிவுட்டினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.