ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிவகார்த்திகேயன் தன்னுடைய நண்பரின் பெயரில் தொடங்கிய 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் பட நிறுவனம் தயாரித்துள்ள 'வேலைக்காரன்' படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கெனவே வெளியாகிவிட்டது. இந்நிலையில் இப்படத்தின் செகண்ட் லுக் வருகிற 8-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடித்துள்ள இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் மலையாள நடிகர் பஹத் பாசில். அவருடைய பிறந்த நாளான ஆகஸ்ட்-8 அன்று வேலைக்காரன் படத்தின் செகண்ட் லுக்கை வெளியிடுகிறார்கள். தொடர்ந்து 'வேலைக்காரன்' படத்தின் டீஸரை ஆகஸ்ட் 14 - ஆம் தேதி வெளியிடவும் முடிவு செய்துள்ளனர்.
ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு செப்டம்பர் 29-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது 'வேலைக்காரன்'. அடுத்தடுத்த நாட்களில் விஜயதசமி, மொகரம், காந்தி ஜெயந்தி என தொடர்ந்து விடுமுறை தினங்கள் என்பதால் செப்டம்பர் 29-ஆம் தேதியை தேர்வு செய்துள்ளனர்.
சிவகார்த்திகேயனின் முந்தையப்படமான ரெமோ கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி வெளியானது. அக்டோபர் 8 மற்றும் 9 சனி, ஞாயிறு விடுமுறையாகவும், 10 ஆம் தேதி ஆயுதபூஜை, 11 ஆம் தேதி விஜயதுசமி, 12 ஆம் தேதி மொகரம் என தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை தினங்களாக அமைந்தன.அதனால்தான் ரெமோ ஒரளவுக்கு வசூல் செய்தது. அதே பார்முலாவில் தற்போது வேலைக்காரன் படத்தையும் வெளியிடுகின்றனர்.