ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரசிகர்களை தியேட்டருக்கு கூட்டி வருவதில் அந்தப் படத்தின் டிரைலருக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. அதனால்தான் டிரைலரை தயார் பண்ணுவதில் அதிக அக்கறை காட்டுவார்கள். இந்த விஷயத்தில் சிறுத்தை சிவா நேர் எதிரானவர்.
அஜித்தை வைத்து அவர் இயக்கிய வேதாளம் படத்தின் டிரைலரை கடைசிவரை அவர் தயார் பண்ணவே இல்லை. தயாரிப்பாளர் தரப்பிலிருந்து பல தடவை அழுத்தம் கொடுத்தபோதும் மற்ற வேலைகளில் பிசியாக இருப்பதாக சொல்லி கடைசிவரை டிரைலரை கட் பண்ணிக் கொடுக்கவில்லை.
இதே சம்பவங்கள் தற்போது விவேகம் பட விஷயத்திலும் நடந்தேறியுள்ளது. அஜித் நடித்து ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளிவரவிருக்கும் 'விவேகம்' படத்தின் டீஸர் மட்டுமே இதுவரை வெளிவந்துள்ளது. பட ரிலீஸிற்கு முன்பு டிரைலர் வெளிவருமா என்று அஜித்துடைய ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். லேட்டஸ்ட் தகவலின்படி டிரைலர் ரிலீஸ் ஆகாது என்றே சொல்கிறார்கள்.
டிரைலர் வெளிவந்தால் படத்தின் கதை, அஜித், காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள், அக்ஷ்ரா ஹாசனுக்கு என்ன கேரக்டர்? விவேக் ஓபராய் கேரக்டர் என்ன போன்ற சஸ்பென்ஸ் வெளியே வந்துவிடும் என்பதால் டிரைலர் வேண்டாம் என்று இயக்குநர் சிவா கருதுவதாக கூறப்படுகிறது.
ஆனாலும் தயாரிப்பு தரப்பு டிரைலரை ரிலீஸ் செய்ய சொல்லி வருகிறார்கள். விவேகம் டிரைலர் வெளிவருமா... அல்லது வேதாளம் போன்று டீசரோடு படம் வெளிவருமா... என்பது விரைவில் தெரிந்துவிடும்.