ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தற்போதைய நிலையில் கைவசம் அதிக படங்கள் வைத்திருக்கும் ஹீரோ விஜய் சேதுபதி தான். ஆனால் அவரது நடிப்பில் அடுத்து வெளிவரும் படம் எது என்பதில் உறுதியான தகவல் இல்லை.
சமீபத்தில் வெளியான 'விக்ரம் வேதா' படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் எந்த படம் அடுத்து வெளியாகிறது என்பதில் இன்னமும் உறுதியான தகவல் இல்லை. இந்நிலையில், விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்த படமாக 'புரியாத புதிர்' படம் செப்டர்ம்பர் மாதம் 1-ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் 'மெல்லிசை' என்ற பெயரில் உருவாகி பிறகு 'புரியாத புதிர்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்த படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார். சைக்லாஜிகல் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி இசை அமைப்பாளராகவும், காயத்ரி பின்னணிப் பாடகியாகவும் நடித்துள்ளனர்.
'விக்ரம் வேதா'வுக்கு இசை அமைத்த சாம்.சி.எஸ். இந்தப் படத்துக்கு இசை அமைத்துள்ளார்.